Latest News :

முத்துராமலிங்க கோவிலில் வைத்து வெளியிடப்பட்ட ’பாண்டிய வம்சம்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்!
Monday November-07 2022

ரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி சார்பில் ஏ.சிவபிரகாஷ் மற்றும் கேப்டன் எம்.பி.ஆனந்த் இணைந்து தயாரிக்கும் படம் ‘பாண்டிய வம்சம்’. இப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கி கதையின் நாயகனாக ஏ.சிவபிரகாஷ் நடிக்கிறார். நாயகிகளாக ரஷிதா பானு மற்றும் ஆலியா ஹயாத் நடித்துள்ளனர். வில்லனாக மனோஜ்குமார் நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் விஜயகுமார், போஸ் வெங்கட், குட்டி புலி சரவண சக்தி ஆகியோர் நடித்துள்ளனர்.

 

ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு கண்ணதாசன் செழியன் ஒளிப்பதிவு செய்ய, மாதவன் படத்தொகுப்பு செய்கிறார்.

 

இப்படம் பற்றி இயக்குநரும் நடிகருமான ஏ.சிவபிரகாஷ் கூறுகையில், “இப்படம் கிராமத்தில் உள்ள அரசியலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. அரசியல் மட்டுமல்லாது இந்த சமுதாயத்துக்கு தேவையான சில முக்கிய விஷயங்களையும் பதிவு செய்துள்ளோம்." என்றார்.

 

Pandiya Vamsam

 

இந்த நிலையில், ‘பாண்டிய வம்சம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பசுமொன் முத்துராமலிங்க திருக்கோவிலில் வைத்து அகில இந்திய பார்வேர்ட் பிளாக் கட்சியின் தேசிய துணை தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர்.பி.வி.கதிரவன் வெளியிட்டார்.

Related News

8642

’எஸ்.கே.எஸ்’ பட முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!
Monday March-16 2026

அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி, சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ’எஸ் கே எஸ்’ (SKS) திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது...

இந்தியா முழுமைக்கும் ஜோய் ஆலுக்காஸின் சேவை விரிவடையும் - நடிகர் பிரஷாந்த் நம்பிக்கை
Monday March-16 2026

தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...

தமிழ் சினிமாவில் நல்ல மாற்றங்கள் வரும் - ஜி.கே.எம்.தமிழ்குமரன் உறுதி
Monday March-16 2026

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க,   திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...

Recent Gallery