Latest News :

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘லால் சலாம்’!
Monday November-07 2022

தனுஷ் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘3’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அப்படத்தை தொடர்ந்து ‘வை ராஜா வை’ என்ற படத்தை இயக்கியவர், தற்போது தனது மூன்றாவது படத்தை இயக்க தயராகிவிட்டார்.

 

‘லால் சலாம்’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் கதையின் நாயகர்களாக நடிக்க, ரஜினிகாந்த் சிறப்பு தோற்றம் ஒன்றில் நடிக்கிறார்.

 

லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கும் இப்படத்தின் துவக்க விழா பூஜையுடன் சமீபத்தில் நடைபெற்றது.  இதில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டார்கள்.

 

Lal Salaam

 

விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தில் ராமு தங்கராஜ் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். பி.பிரவீன் பாஸ்கர் படத்தொகுப்பு  செய்கிறார். 

 

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருப்பதாக தெரிவித்த லைகா புரொடக்‌ஷன்ஸ் முதன்மை அதிகாரி ஜி.கே.எம்.தமிழ்குமரன், படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.

Related News

8643

’எஸ்.கே.எஸ்’ பட முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!
Monday March-16 2026

அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி, சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ’எஸ் கே எஸ்’ (SKS) திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது...

இந்தியா முழுமைக்கும் ஜோய் ஆலுக்காஸின் சேவை விரிவடையும் - நடிகர் பிரஷாந்த் நம்பிக்கை
Monday March-16 2026

தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...

தமிழ் சினிமாவில் நல்ல மாற்றங்கள் வரும் - ஜி.கே.எம்.தமிழ்குமரன் உறுதி
Monday March-16 2026

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க,   திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...

Recent Gallery