Latest News :

பிரபல தெலுங்கு நடிகர் சாத்விக் வர்மா கோலிவுட்டில் ஹீரோவாக களம் இறங்கும் ‘சிக்லெட்ஸ்’!
Monday November-07 2022

தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி,  அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு, பிரபாஸ், வெங்கடேஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து பிரபலமானவர் சாத்விக் வர்மா. தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வளர்ந்திருக்கும் இவர்,  ’சிக்லெட்ஸ்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக களம் இறங்குகிறார்.

 

தெலுங்கின் முன்னணி இயக்குநரான ஸ்ரீகாந்த் அடாலாவின் இணை இயக்குநரும், 'திறந்திடு சிசே' எனும் படத்தை இயக்கிய இயக்குநர் எம்.முத்து இயக்கத்தில் தயாராகியிருக்கும் இப்படத்தில் சாத்விக் வர்மாவுடன், ‘வலிமை’ படத்தில் நடித்திருக்கும் ஜாக் ராபின்சன் மற்றொரு கதையின் நாயகராக நடித்திருக்கிறார். நடிகைகள் நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹைதர், மஞ்சீரா ஆகியோர் கதையின் நாயகிகளாகவும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ஸ்ரீமன், மனோபாலா, சம்பத்ராம், சுரேகா வாணி, ஜானகி, மீனாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

 

கொளஞ்சி குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ’ஹர ஹர மகாதேவகி’, ’இருட்டு அறையில் முரட்டு குத்து’ போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்த பாலமுரளி பாலு இசையமைத்திருக்கிறார். ‘வலிமை’ மற்றும் ‘துணிவு’ படப்புகழ் விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்புப் பணிகளை கவனிக்க, கலை இயக்கத்தை ராஜு மேற்கொண்டிருக்கிறார். 

 

டீன்ஸ் டிராமா ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை எஸ். எஸ். பி. ஃபிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஏ. ஸ்ரீனிவாசன் குரு, தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில்  பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

 

இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக நிறைவு பெற்று, தற்போது இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ளார்.

 

Sathvik Varma

 

படம் குறித்து இயக்குநர் எம்.முத்து கூறுகையில், “2கே கிட்ஸ் இளைஞர்களுக்கும், அவர்களுடைய பெற்றோர்களுக்கும் இடையே ஏற்படும் தலைமுறை இடைவெளியை மையப்படுத்தி இப்படத்தின் திரைக்கதை உருவாகி இருக்கிறது. இன்றைய இளைய தலைமுறையினர் காதல் குறித்தும், காமம் குறித்தும் கொண்டிருக்கும் எண்ணங்களுக்கும், இது தொடர்பாக அவர்களுடைய பெற்றோர்களின் நிலைப்பாட்டிற்கும் இடையே உள்ள கருத்தியல் இடைவெளியை சுவாரசியமான சம்பவங்களுடன் சிக்லெட்ஸில் விவரித்திருக்கிறோம். இதனால் தான் இப்படத்தின் டைட்டிலுடன் '2k கிட்ஸ்' என்ற டேக்லேனையும் இடம்பெற வைத்திருக்கிறோம்.” என்றார்.

 

’சிக்லெட்ஸ்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரின் வடிவமைப்பு மற்றும் அதில் இடம்பெற்றுள்ள விஷயங்கள் இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Related News

8644

’எஸ்.கே.எஸ்’ பட முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!
Monday March-16 2026

அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி, சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ’எஸ் கே எஸ்’ (SKS) திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது...

இந்தியா முழுமைக்கும் ஜோய் ஆலுக்காஸின் சேவை விரிவடையும் - நடிகர் பிரஷாந்த் நம்பிக்கை
Monday March-16 2026

தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...

தமிழ் சினிமாவில் நல்ல மாற்றங்கள் வரும் - ஜி.கே.எம்.தமிழ்குமரன் உறுதி
Monday March-16 2026

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க,   திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...

Recent Gallery