Latest News :

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘ரங்கோலி’ பட பர்ஸ்ட் லுக்!
Monday November-14 2022

வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் புதுமுகங்களில் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ‘ரங்கோலி’. தற்போதைய காலகட்ட பள்ளி வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தை கோபுரம் ஸ்டுடியோஸ் சார்பில் கே.பாபு ரெட்டி மற்றும் ஜி.சதீஷ்குமார் தயாரித்துள்ளனர்.

 

பள்ளி மாணவர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களது குடும்பங்களை சுற்றி நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து உருவாகும் இப்படம் பள்ளி மாணவர்களின் வாழ்க்கையை சொல்வதோடு, குடும்பப்படமாகவும் உருவாகியுள்ளது. பெற்றோரின் வற்புறுத்தலால் ஒரு பள்ளியில் இருந்து வேறொரு உயர்தர பள்ளிக்கு மாற்றலாகும் மாணவனின் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் தான் இந்த படம்.

 

‘மாநகரம்’, ‘தெய்வத்திருமகள்’ படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஹமரேஷ், இப்படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார். பிரார்த்தனா, சாய் ஸ்ரீ, அக்‌ஷயா ஆகியோர் முதன்மை வேடங்களில் நடிக்கிறார்கள். ஆடுகளம் முருகதாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 

 

சுந்தரமூர்த்தி கே.எஸ் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ஐ.மருதநாயகம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜி.சத்யநாராயணன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

 

சென்னை மற்றும் கடப்பா பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. 

 

இந்த நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் அருண் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் அதர்வா, இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ், நடிகர் சதீஷ் நடிகை வாணி போஜன், நவீன் சந்த்ரா கார்த்திக் ரத்னம் ஆகியோர்  ’ரங்கோலி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

 

பள்ளி மாணவர்கள் ஒன்றாக கூடி நிற்கும் ’ரங்கோலி’ பர்ஸ் லுக் போஸ்டர் வைரலாகி வருவதோடு, பள்ளி ஞாபகங்களை நினைவுப்படுத்தும் வகையில் இருப்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Related News

8659

இந்தியா முழுமைக்கும் ஜோய் ஆலுக்காஸின் சேவை விரிவடையும் - நடிகர் பிரஷாந்த் நம்பிக்கை
Monday March-16 2026

தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...

தமிழ் சினிமாவில் நல்ல மாற்றங்கள் வரும் - ஜி.கே.எம்.தமிழ்குமரன் உறுதி
Monday March-16 2026

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க,   திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

Recent Gallery