அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம் என்றும், அவரது பெற்றோர் அவருக்கு மாப்பிள்ளை தேடுவதில் தீவிரம் காட்டி வருகிறார்கள் என்று பல மாதங்களாக செய்திகள் உலா வந்தாலும், அவ்வபோது அது குறித்து விளக்கம் அளிக்கும் அனுஷ்கா, அது வெறும் வதந்தி தான், என்று கூறிவிடுவார்.
ஆனால், தற்போது வெளியாகியிருக்கும் தகவலை அனுஷ்கா, மறுப்பாரா அல்லது ஏற்றுக்கொள்வாரா என்பதை பொருந்திருந்து பார்ப்போம். அந்த தகவல் என்னவென்றால், அனுஷ்காவுக்கு வரும் டிசம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாம். மாப்பிள்ளை வேறும் யாருமல்ல, நம்ம பாகுபலி மஹாராஜா தான். ஆம், பிரபாஸுக்கும், அனுஷ்காவுக்கும் தான் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருக்கிறதாம்.
பிரபாஸும், அனுஷ்காவும் காதலிப்பதாகவும், அவர்கள் தங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல தயாராகிவிட்டதாகவும் அவர்களின் நெருங்கிய நண்பர் தெரிவித்ததாக எழுத்தாளர் ஒருவர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
பிரபாஸுக்கும், அனுஷ்காவுக்கும் வரும் டிசம்பர் மாதம் நிச்சயதார்த்தம் என்றும் அந்த எழுத்தாளர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
புதுப்பட்ங்களில் நடிப்பதற்காக உடல் எடையை குறைப்பதில் அனுஷ்கா தீவிரம் காட்டி வருகிறார், என்பது தான் வதந்தியாம், அவர் உடல் எடையை குறைப்பதே திருமணத்திற்காக தான் என்று கூறப்படுகிறது.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...