மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வால்டேர் வீரய்யா’. கே.எஸ்.ரவீந்திரன் என்கிற பாபி கொல்லி இயக்கும் இப்படத்தின் தலைப்புகான டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றதோடு, மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது.
இந்த நிலையில், இப்படத்திற்கு இசையமைக்கும் தேவி ஸ்ரீ பிரசாத், படம் பற்றிய புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அவருடைய இணைய பக்கத்தில், “மெகா ஸ்டார் சிரஞ்சீவி, நடிகை ஊர்வசி ரௌத்லா இணைந்து கலக்கியிருக்கும் பாடலின் லிரிக்கல் வீடியோ இந்த வாரம் வெளியிடப்படும்” என்று பதிவிட்டுள்ளார்.
மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் அதிவேக நடனத்திற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு இருக்கும். இந்நிலையில் 'வால்டேர் வீரய்யா' படத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌத்லாவும் இணைந்து நடனமாடி இருக்கிறார் என்பதால் எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்திருக்கிறது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவிசங்கர் ஆகியோர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கும் 'வால்டேர் வீரய்யா' படத்தில் இடம்பெற்றிருக்கும் சிங்கிள் ட்ராக் இந்த வாரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.
அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி, சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ’எஸ் கே எஸ்’ (SKS) திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது...
தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...
ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க, திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...