Latest News :

இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பின் தலைவரான தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ்!
Monday November-14 2022

கொரியாவில் அறிமுகமாகி தற்போது உலகின் பல நாடுகளில் பரவலாக பயிற்சி அளிக்கப்பட்டு வரும் தற்காப்புக்கலை ‘டேக்வாண்டோ’. ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினருக்கும் இந்த தற்காப்புக்கலை மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தென் கொரியாவின் தேசிய விளையாட்டான இது ஒலிம்பிக் போட்டியிலும் விளையாடப்படுகிறது.

 

இந்த நிலையில், இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பிற்கான தேர்தல் இன்று டெல்லியில் உள்ள இந்திய ஒலிம்பிக் சங்கம் அலுவலகத்தில் நடைபெற்றது. இத்தேர்தலில் தலைவர் பதவிக்கு பிரபல திரைப்பட தயாரிப்பாளர் நடிகர் மற்றும் வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கே.கணேஷ் போட்டியிட்டார்.

 

வாக்குப்பதிவு முடிந்த உடன் வாக்குகள் எண்ணப்பட்டது. இதில், ஐசரி கே.கணேஷ், தன்னை எதிர்த்து போட்டியிட்ட குஜராத்தை சேர்ந்த சஞ்சய் சுப்ரியவை வீழ்த்தி அமோக வெற்றி பெற்றார். ஐசரி கே.கணேஷுக்கு ஆதரவாக 20 மாநிலங்களும்,  சஞ்சய் சுப்பிரிய அவர்களுக்கு ஆதரவாக 15 மாநிலங்களும் வாக்களித்துள்ளனர்.

 

மேலும் டாக்டர். ஐசரி கே.கணேஷ் அணியில் செயலாளர், பொருளாளர், துணை தலைவர்கள் (5), இணை செயலாளர்கள் (3), உறுப்பினர்கள் என அனைவரும் வெற்றி பெற்று இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பு தேர்தலில் தனி முத்திரை பதித்தனர்.

 

தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவராகவும் டாக்டர்.ஐசரி கே.கணேஷ் பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

8662

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

Recent Gallery