ஜெய் நடிப்பில் உருவாகி வரும் சயின்ஸ் பிக்ஷன் த்ரில்லர் படம் ‘பிரேக்கிங் நியூஸ்’. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஆண்ட்ரூ பாண்டியன் இயக்குகிறார். ராகுல் பிலிம்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் கே.திருக்கடல் உதயம் தயாரிக்கிறார்.
இதில் ஜெய்க்கு ஜோடியாக தெலுங்கின் பானு ஸ்ரீ நடிக்கிறார். இவர்களுடன் ராகுல் தேவ், தேவ் கில் வில்லன்களாகவும் சிநேகன் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். மேலும், பழ கருப்பையா, இந்திரஜா, ஜெய் பிரகாஷ், சந்தானபாரதி மற்றும் பலர் நடிக்கின்றனர்.
முழுக்க முழுக்க ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்தில் இடம்பெறும் ஆக்ஷன் காட்சிகள் மிகப்பெரிய அளவில் படமாக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஜெய் ரோபோக்களுடன் சண்டையிடும் காட்சி மிகப்பெரிய பொருட்ச் செலவில் பிரமாண்டமாக படமாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
ஜானிலால் மற்றும் செவிலோ ராஜா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு எல்.வி.முத்து பின்னணி இசை அமைத்துள்ளார். பாடல்களுக்கு விஷால் பீட்டர் இசையமைத்துள்ளார். அந்தோணி படத்தொகுப்பு செய்ய, என்.எம்.மகேஷ் கலையை நிர்மாணித்துள்ளார். ராதிகா நடன காட்சிகளை வடிவமைக்க, ஸ்டன்னர் சாம் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார்.
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...
ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் G...