கே.வி.அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி வெளியீடாக வெளியான திரைப்படம் ‘பிரின்ஸ்’. காமெடி ஜானர் திரைப்படமான இப்படத்தில் உக்ரைன் நாட்டு நடிகை மரியா ரியாபோஷப்கா நாயகியாக நடித்திருக்கிறார். மேலும், சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
பள்ளி ஆசிரியராக இருக்கும் சிவகார்த்திகேயன், அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியராக இருக்கும் பிரிட்டிஷ் நாட்டு பெண்ணை காதலிக்கிறார். அவர்களின் காதலுக்கு வரும் எதிர்ப்புகளை மையப்படுத்திய காமெடி ரொமாண்டிக் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததோடு, வசூலிலும் பெரிய வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில், பிரபல ஒடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வரும் நவம்பர் 25 ஆம் தேதி முதல் ‘பிரின்ஸ்’ திரைப்படத்தை உலகம் முழுவதும் காணலாம்.
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...
ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் G...