தமிழ் சினிமாவின் முக்கியமான தயாரிப்பாளர்களில் ஒருவரான பிரின்ஸ் பிக்சர்ஸ் லக்ஷ்மண் குமார், ‘சர்தார்’ படம் மூலம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த நிலையில், தனது அடுத்த படத்தின் வெளியீட்டுக்கு தயாராகி விட்டார்.
சசிகுமார் நாயகனாக நடித்திருக்கும் ‘காரி’ படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மண் குமார் தயாரிக்க, அறிமுக இயக்குநர் ஹேமந்த் இயக்கியுள்ளார்.
இதில், சசிகுமாருக்கு ஜோடியாக புதுமுகம் பார்வதி அருண் நடித்துள்ளார். ஜேடி சக்கரவர்த்தி வில்லனாக நடித்திருக்கிறார். இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, ஆடுகளம் நரேன், இயக்குநர் பாலாஜி சக்திவேல், நாகி நீடு, பிரேம் குமார், பிக் பாஸ் சக்யுக்தா, அம்மு அபிராமி, ராம்குமார், தேனி முருகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

எல்லை தெய்வமான காரியின் பெயரில் உருவாகியுள்ள இப்படம், சசிகுமாரின் படங்களில் என்னென்ன கமர்ஷியல் அம்சங்கள் எல்லாம் இருக்குமோ அனைத்தும் கலந்த அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது.
இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், வரும் நவம்பர் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...
ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் G...