Latest News :

சமூக அக்கறையுடன் உருவான படைப்பு! - ‘கலகத் தலைவன்’ படத்தை பாராட்டிய முதல்வர்
Thursday November-17 2022

காமெடி மற்றும் காதல் கலந்த திரைப்படங்களில் நடித்து வந்த உதயநிதி ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினரான பிறகு சமூக பிரச்சனைகள் மற்றும் மக்கள் நலன் சார்ந்த கதைகளை தேர்வு செய்து நடிக்க தொடங்கியுள்ளார். அந்த வகையில், கடந்த மே மாதம் உதயநிதி நடிப்பில் வெளியான ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படம் சமூக நீதியை வலியுறுத்தும் சிறந்த படைப்பு என்று பாராட்டு பெற்றது. 

 

’நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத்தை தொடர்ந்து உதயநிதி நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் ‘கலகத் தலைவன்’.

 

ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கலகத் தலைவன்’ திரைப்படம் நாளை (நவம்பர் 18) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

 

MK Stalin watch Kalaga Thalaivan

 

இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,  நேற்று ‘கலகத் தலைவன்’ திரைப்படத்தை படக்குழுவினருடன் இணைந்து தனியார் திரையரங்கில் பார்த்தார். படத்தை பார்த்த பின் சமூக அக்கறையுடன் நேர்த்தியான படைப்பாக படம் உள்ளது, என்று கூறியவர், படத்தின் நாயகன் உதயநிதி, இயக்குநர் மகிழ் திருமேனி மற்றும் படக்குழுவினரை பாராட்டு தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

Related News

8671

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

Recent Gallery