Latest News :

வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிக்கும் ‘கஸ்டடி’!
Thursday November-24 2022

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாக சைதன்யாவுடன் கைகோர்த்திருக்கும் வெங்கட் பிரபு, இப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் நேரடியாக அறிமுகமாகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படம் நாக சைதன்யாவின் 22 வது திரைப்படமாக உருவாகிறது.

 

இந்த நிலையில், ‘என்.சி 22’ என்ற தலைப்பில் அழைக்குப்பட்டு வந்த இப்படத்தின் தலைப்பு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. நாக சைதன்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு தலைப்பு மற்றும் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, படத்திற்கு ‘கஸ்டடி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

 

வழக்கமாக வெங்கட்பிரபு படங்களில் இடம்பெறும் டேக் ரசிகர்களிடையே கவனத்தைப் பெறும். அதுபோல, இந்தப் படத்திற்கு 'A Venkat Prabhu Hunt' என்ற டேக் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை வெளியாகியுள்ள அனைத்து போஸ்டர்களும் இந்தக் கதை ஒரு ஆக்‌ஷன் எண்டர்டெயினராக இருக்கும் என்பதையே உறுதிப்படுத்துகிறது.

 

'நீ உலகத்தை எப்படி பார்க்க விரும்புகிறாயோ அதற்கான மாற்றமாக நீ இருக்க வேண்டும்' என்ற மகாத்மா காந்தியின் புகழ்பெற்ற மேற்கோள் நாக சைதன்யாவின் இந்தப் படத்தின் கதாபாத்திரத்தோடு நெருங்கிய தொடர்புடையது.

 

Custody

 

ஸ்ரீனிவாச சில்வர் ஸ்கிரீன் சார்பில் ஸ்ரீனிவாச சித்தூரி தயாரிப்பில் பிரமாண்ட படைப்பாக உருவாகும் இப்படத்திற்கு மாஸ்ட்ரோ இளையராஜா மற்றும் லிட்டில் மாஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்க, பவன் குமார் இந்தப் படத்தை வழங்குகிறார்.

Related News

8684

இந்தியா முழுமைக்கும் ஜோய் ஆலுக்காஸின் சேவை விரிவடையும் - நடிகர் பிரஷாந்த் நம்பிக்கை
Monday March-16 2026

தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...

தமிழ் சினிமாவில் நல்ல மாற்றங்கள் வரும் - ஜி.கே.எம்.தமிழ்குமரன் உறுதி
Monday March-16 2026

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க,   திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

Recent Gallery