’விக்ரம்’ வெற்றியை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வரும் கமல்ஹாசன், மூத்த இயக்குநர் கே.எஸ்.விஸ்வநாதனின் பிறந்தநாள் விழாவில் கலந்துக்கொள்வதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐதராபாத் சென்றார். மீண்டும் சென்னைக்கு திரும்பிய நிலையில், உடல்சோர்வாக இருப்பதாக கூறியதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், திடீரென்று நேற்று நள்ளிரவு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், அவரை சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கும் கமல்ஹாசன், இன்று மாலை வீடு திரும்புவார் என கூறப்பட்டது. பிறகு அவர் அதிகாலையில் வீடு திரும்பி விட்டார் என்று சொல்லப்பட்டது.
ஆனால், தற்போதைய தகவல்படி நடிகர் கமல்ஹாசன், இன்னும் மருத்துவமனையில் தான் இருப்பதாகவும், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.
அறிமுக இயக்குநர் அப்பாஸ் ஏ...
பிரபலமான நாவல்கள் திரைப்படங்களாக உருப்பெற்று விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெறுவது தமிழ் சினிமாவில் அதிகரித்து வருகிறது...
‘கே.ஜி.எப்’ புகழ் ஹோம்பாலே பிலிம்ஸ் விஜய் கிரகந்தூர் மற்றும் இயக்குநர் பிரசாந்த் நீல் கூட்டணியில் உருவாகி வரும் மற்றொரு பிரமாண்ட திரைப்படம் ‘சலார்’...