விஜயின் மெர்சல் ஒரு பக்கம் பல பிரச்சினைகளை சந்தித்துக்கொண்டிருந்தாலும், மறுபக்கம் மெர்சல் படத்தை கொண்டாட இப்போதே ரசிகர்கள் தயாராகிவிட்டார்கள். 100 அடி கட் அவுட், அசுர பேனர்கள் என்று விஜயின் ரசிகர்கள் பட்டையை கிளப்ப தயாராகிவிட்ட நிலையில், அரசியல் மற்றும் சினிமாவில் உச்சத்தை தொட்ட ஒருவர் விஜயை புகழ்ந்து பேசியுள்ளார்.
அவர் தான் கேப்டன் விஜயகாந்த், சுமார் 150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள விஜயகாந்த், அனைத்து படங்களிலும் ஹீரோவாக மட்டுமே நடித்துள்ளார் என்பது அவருக்கு மட்டுமே உள்ள பெருமை. மேலும், விஜயின் அப்பாவான எஸ்.ஏ.சந்திரசேகரின் அதிக படங்களில் நடித்தவரும் அவர் தான். விஜயின் ஆரம்ப கட்டத்தில் அவருக்கு தோள் கொடுத்தவரும் விஜயகாந்த் தான்.
இதனால் தான் விஜயகாந்த் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது மிகுந்த மரியாதையும், விஜய் மீது மிகுந்த பாசத்தையும் வைத்திருப்பார்.
இந்த நிலையில், பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த விஜயகாந்திடம், “உங்களுடன் இணைந்து நடித்த விஜய் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? என்று அவரிடம் கேட்டதற்கு, “விஜய்யின் லெவலே தற்போது வேறு, நல்ல இடத்திற்கு சென்றுள்ளார்
“ என்று பாராட்டி பேசியுள்ளார்.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...