Latest News :

கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்ட ‘ரங்கோலி’ இரண்டாம் பார்வை போஸ்டர்!
Friday November-25 2022

கோபுரம் ஸ்டுடியோஸ் சார்பில் கே.பாபு ரேட்டி மற்றும் ஜி.சதீஷ்குமார் தயாரிப்பில், இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் புதுமுகங்களின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரங்கோலி’. தற்போதைய காலகட்ட பள்ளி வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது இரண்டாம் பார்வை போஸ்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியின் கலைவிழாவில் வெளியிடப்பட்டுள்ளது.

 

2000 கல்லூரி மாணவர்கள் முன்னிலையில், கல்லூரி தலைவர் ஏ.சி.எஸ்.அருண்குமார் தலைமையில் கோலாகலமாக வெளியான ‘ரங்கோலி’ இரண்டாம் பார்வை போஸ்டரும் முதல் பார்வை போஸ்டர் போல் வைரலாகி வருகிறது.

 

குடும்பத்தினரின் வற்புறுத்தலால் ஒரு பள்ளியில் இருந்து வேறொரு உயர்தர பள்ளிக்கு மாற்றலாகும் மாணவனின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களே இப்படத்தின் கதை. பள்ளி மாணவர்கள் குதூகலமான கொண்டாட்டத்துடன் அமர்ந்திருக்கும் இந்த செகண்ட் லுக் நம் பள்ளிக்காலத்தின் அழகான நினைவுகளை கிளறுகிறது. படத்தின் போஸ்டர்கள்  படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரித்து வருகிறது.

 

Rangoli Second Look

 

மாநகரம், தெய்வத்திருமகள் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஹமரேஷ், இப்படத்தில் நாயகனாக அறிமுகாமகிறார். பிரார்த்தனா, சாய் ஶ்ரீ, அக்‌ஷயா ஆகியோர் இப்படத்தில் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆடுகளம் முருகதாஸ்  முக்கிய பாத்திரமொன்றில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கடப்பா ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது.

 

சுந்தரமூர்த்தி கே.எஸ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஐ.மருதநாயகம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர்.சத்யநாரயணன் படத்தொகுப்பு செய்திருக்கும் இப்படத்தின் கலை இயக்குநராக ஆனந்த் மணி பணியாற்றியிருக்கிறார். கார்த்திக் நேத்தா, வேல்முருகன், இளன் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.

Related News

8692

‘தீயவர் குலை நடுங்க’ கதையை கேட்டு உடல் நடுங்கி விட்டது - ஐஸ்வர்யா ராஜேஷ்
Friday November-14 2025

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

Recent Gallery