Latest News :

அரசியல் உலகிலும் நாயகனாக உருவெடுத்த உதயநிதி ஸ்டாலின்! - நடிகர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் வாழ்த்து
Sunday November-27 2022

நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் மற்றும் சட்டமன்ற உறுப்பினரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 45 வது பிறந்தநாளை கொண்டாகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

 

அந்த வகையில், தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபரும் திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளருமான பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், திரையுலகில் மட்டும் இன்றி அரசியல் உலகிலும் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக உருவெடுத்துள்ளார், என்று வாழ்த்தியுள்ளார்.

 

அவர் வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்து செய்தியில், ”அரசியல் குடும்பத்தில் பிறந்தாளும் வாரிசு என்ற அதிகாரத்தை காட்டாமல் கடைக்கோடி தொண்டனாக திமுக-வில் பணியாற்றி வந்த உதயநிதி, அனைவரிடமும் எளிமையாகவும் அன்பாகவும் பழகி மக்களிடத்தில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கிறார்.

 

கழகத்தில் சாதாரண தொண்டனாக பணியாற்றி பல்வேறு கட்டங்களை கடந்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை பெற்ற உதயந்தி ஸ்டாலின், சரித்திர வெற்றி பெற்றதோடு, இப்படி ஒரு சட்டமன்ற உறுப்பிர் தான் வேண்டும் என்று அனைத்து மக்களும் ஏங்கும் அளவுக்கு தனது தொகுதியில் பல்வேறு பணிகளை மேற்கொண்டார். அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினராக அல்லாமல், அப்பகுதியின் அண்ணனாகவும், தம்பியாகவும், மகனாகவும் வலம் வருகிறார்.

 

எத்தகைய அதிகாரம் இருந்தாலும் அவற்றை எந்த இடத்திலும் வெளிக்காட்டாமல் தன்னை சாதாரண மனிதனாக மட்டுமே வெளிப்படுத்தும் விதமாக மக்களுக்கு தோள் கொடுக்கும் தோழனாக வலம் வரும் உதயநிதி, திரையுலகில் மட்டும் அல்ல அரசியல் உலகிலும் நாயகனாக உருவெடுத்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

 

தமிழ் சினிமாவுக்கு வழிகாட்டியாகவும், நம்பியாகவும் திகழும் உதயநிதி ஸ்டாலின், திமுக தொண்டர்களின் மனதில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் பணியாற்றி வருவதோடு, தமிழக மக்களின் எதிர்கால நம்பிக்கையாகவும் திகழ்கிறார். 

 

மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கும் எங்கள் உதயசூரியனான உதயநிதி ஸ்டாலின், மென்மேலும் வளர்ந்து தமிழகத்துக்கு ஒளி தரும் சூரியனாக பிரகாசிப்பார் என்று கூறி வாழ்த்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

 

‘களவாணி 2’ படத்தில் வில்லனாக மிரட்டிய நடிகர் துரை சுதாகர், அப்படத்தை தொடர்ந்து ‘டேனி’, ‘கபெ ரணசிங்கம்’, ‘ஆன்டி இண்டியன்’ என பல படங்களில் பல வித்தியாசமான வேடங்களில் நடித்திருக்கிறார். 

 

லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில், ஏ.சற்குணம் இயக்கத்தில் அதர்வா, ராஜ்கிரண் ஆகியோரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘பட்டத்து அரசன்’ படத்தில் ராஜ்கிரணின் இளையமகன் வேடத்தில் துரை சுதாகர் நடித்திருக்கிறார்.

 

படத்தை பார்த்து பாராட்டும் பொதுமக்கள் படத்தில் நடித்திருக்கும் நடிகர்களின் நடிப்பை குறித்து பாராட்டும் போது துரை சுதாகரின் நடிப்பு வெகுவாக கவர்ந்திருப்பதாகவும், தஞ்சை மாவட்டத்து மனிதராக அவர் வாழ்த்திருப்பதாகவும் பாராட்டி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

8693

நடிகை சரோஜா தேவி வாழ்க்கை வரலாறு!
Monday July-14 2025

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) காலமானார்...

நித்யாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற விருப்பம் இருந்தது - மனம் திறந்த நடிகர் விஜய் சேதுபதி
Monday July-14 2025

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் - அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி - நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'தலைவன் தலைவி' திரைப்படம் ஜூலை 25ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது...

’கே.டி. - தி டெவில்’ அனைவருக்கும் பிடித்த மாஸ் ஆக்‌ஷன் படமாக இருக்கும் - துருவ் சர்ஜா நம்பிக்கை
Saturday July-12 2025

கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான  KVN Productions வெங்கட் கே...

Recent Gallery