அரபி புரொடக்ஷன்ஸ் சார்பில் ரஜீஃப் சுப்பிரமணியம் மற்றும் விஜயன் வெஞ்சர்ஸ் சார்பில் வினோத் ராஜேந்திரன் இணைந்து தயாரிக்கும் படம் ‘ஃபைண்டர்’. உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகும் பரபரப்பான த்ரில்லர் படமான இப்படத்தை வினோத் ராஜேந்திரன் இயக்குகிறார்.
நடிகர் சார்லி மிக முக்கியமான திருப்புமுனை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் செண்ட்ராயன், அபிலாஷ், கோபிநாத், சங்கர், தாரணி, பிரானா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
அமெரிக்காவில் செய்யாத குற்றத்திற்காக நீண்ட காலம் சிறையில் இருப்பவர்களைக் கண்டுபிடித்து அவர்களை நிரபராதிகள் என நிரூபித்து அதற்கு அவர்களுக்கு அரசாங்கம் தரும் இழப்பீட்டு தொகையை பாதிக்கப்பட்டவருக்குப் பெற்றுத்தரும் நிறுவனத்தைப் பற்றிய உண்மை கதையின் அடிப்படையில், சென்னை பின்னணியில் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
சீட் நுணியில் ரசிகர்களை உட்கார வைக்கும் பரபரப்பான த்ரில்லர் திரைப்படமாக உருவாக இப்படத்திற்கு பிரசாந்த் வெள்ளிங்கிரி ஒளிப்பதிவு செய்கிறார். தமிழ்குமரன் படத்தொகுப்பு செய்ய, சூர்ய பிரசாத் இசையமைக்கிறார். அஜய் சம்பந்தம் கலையை நிர்மாணிக்க, ஏ.ராஜா மக்கள் தொடர்பாளராக பணியாற்றுகிறார்.
சென்னை மற்றும் இராம்நாடு பகுதிகளில் ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடத்தி முடிக முடிவு செய்யப்பட்டுள்ள இப்படத்தின் துவக்க விழா சென்னை பிரசாத் லேபில் பூஜையுடன் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களும் கலந்துகொண்டார்கள்.
படத்தின் முதல்பார்வை போஸ்டர் வெளியீட்டு மற்றும் பிற விவரங்கள் குறித்து படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...
ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் G...