Latest News :

உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் ‘வாண்டு’
Wednesday October-04 2017

அறிமுக இயக்குநரான "வாசன் ஷாஜி" "வாண்டு" என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இவர்  இயக்குநர் செல்வராகவன் உதவியாளராக மற்றும் சில முன்னனி இயக்குநர்களிடம் இணை இயக்குநராக பனியாற்றியுள்ளார்.

 

"வாண்டு" ( North Madras ) நார்த் மெட்ராஸ் - ல் 1970 -1971 நடந்த Street Fight - ல்  நடந்த உண்மை சம்பவத்தினை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கதை.

 

இந்த கதையில் இரு கதாபாத்திரம் ( 1 ஹீரோ அப்பா முருகன் ) ( 2  வில்லன் அப்பா மஹா காந்தி ) ஒருத்தரை ஒருத்தர் மோதி கொள்ளும் Kick boxing போட்டியில்  ஹீரோ உடைய  அப்பா "முருகன்" வில்லனால் தாக்கப்பட்டு  மனநலம் பாதிக்கப்படுகிறார். ஐந்து வருடம் கழித்து ஜெயித்த வில்லனின் மகன் பயிற்சிப்பெறும் Kick boxing பள்ளியில் ஹீரோவும் சேர்கிறார் பயிற்சியில் இவர்களுக்குள் விரோதம் ஏற்படுகிறது. இதை பொறுத்துக் கொள்ள முடியாத வில்லன் "மஹா காந்தி" ஹீரோவுக்கு இடையூறு செய்கிறார்.இந்த விஷயம் இரண்டாவது ஹீரோவான Kick boxing மாஸ்டருக்கு தெரியவருகிறது. மாஸ்டர் ஹீரோவிற்கு அதிக பயிற்சி கொடுக்க பயிற்சி பெற்ற ஹீரோ, வில்லன் "மஹா காந்தி" பையனுடன் வட சென்னையில் பெரிய Street Fight நடக்கிறது இந்த சண்டையில் இருவருக்குள்  ஏற்படும் விரோதத்தால் இவர்களுக்குள் என்ன நடக்கிறது என்பது கதை.

 

இப்படத்தில் தடையறதாக்க மற்றும் கொம்பன் "மஹா காந்தி", மெட்ராஸ் புகழ் "ரமா",  தெறி fame "சாய் தீனா", ரோமியோ ஜூலியட் "புவனேஸ்வரி", 2.0 வில் நடித்துக்கொண்டிருக்கும் "ரவிசங்கர் ", வின்னர் பட தயாரிப்பாளர்  "ராமசந்திரன் ", "முருகன்" இவர்களுடன் அறிமுக நாயகன் "சீனு",  "S.R.குணா"  "ஆல்வின்" கதாநாயகியாக "ஷிகா" ஆகியோர் நடிக்கின்றனர் புதுமுக இசையமைப்பாளர்  "A.R.நேசன்", பாடல்கள் "மோகன் ராஜன்", கலை "J.P.K.பிரேம்", ஒளிப்பதிவு "ரமேஷ்" & "V.மஹேந்திரன்", படத்தொகுப்பு "ப்ரியன்",  நடனம் "பாபி அன்டனி", சண்டைப்பயிற்சி  "ஓம் பிரகாஷ்", கதை, திரைக்கதை,வசனம்,இயக்கம் "வாசன் ஷாஜி ",  M M power Cine Creation வழங்கும் "வாசன் ஷாஜி " தயாரிக்கிறார், இணை தயாரிப்பு "டத்தோ N முனியாண்டி".

Related News

870

மக்கள் என் கருத்துகளை ஏற்றுக்கொண்டனர் - இயக்குநர் பா.இரஞ்சித் பெருமிதம்
Sunday September-14 2025

லேர்ன் & டீச் புரொடக்‌ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...

கதை தேர்வு மூலம் வியக்க வைக்கும் அர்ஜூன் தாஸ்!
Saturday September-13 2025

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...

சக்தி ஃபிலிம் பேக்டரி நிறுவனத்துடன் வெற்றியை கொண்டாடிய ‘காந்தி கண்ணாடி’ படக்குழு!
Saturday September-13 2025

இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...

Recent Gallery