Latest News :

ரிலீஸுக்கு முன்பே மக்களிடம் வரவேற்பு பெற்ற ‘கட்டா குஸ்தி’
Thursday December-01 2022

எப்.ஐ.ஆர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து விஷ்ணு விஷாலின் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் ‘கட்டா குஸ்தி’. செல்லா அய்யாவு இயக்கியிருக்கும் இப்படத்தை  விவி ஸ்டுடியோஸ் சார்பில் விஷ்னு விஷாலும், ஆர்.டி டீம் ஒர்க்ஸ் சார்பில் ரவி தேஜாவும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

 

இதில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருக்கிறார். இவர்களுடன் கஜராஜ், கருணாஸ், ஸ்ரீஜா ரவி, முனிஷ்காந்த், காளி வெங்கட், ரெடின் கிங்ஸ்லி, ஹரீஷ் பெராடி, அஜய், சத்ரு என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது.

 

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பிரசன்னா ஜி.கே படத்தொகுப்பு செய்திருக்கிறார்.

 

ஏற்கனவே இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகரக்ளிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடும் அறிவிப்பு வெளியானவுடன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

 

இந்த நிலையில், நாளை (டிசம்பர் 20) முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் வெளியாவதற்கு முன்பாகவே மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

 

முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சத்துடன் உருவாகியுள்ள இப்படத்தில் ஆண், பெண் சமத்துவம் பற்றி பேசியிருப்பதோடு, ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு குறைவான மதிப்பளிக்கும் சமூகத்தில் பெண்கள் எத்தகைய பெருமைக்குரியவர்கள் என்பதை உணர்த்துவம் வகையில் படம் இருப்பதாக சொல்லப்படுகிறது.

 

படம் வெளியீட்டுக்கு முன்பாக சில சிறப்பு காட்சிகளை படக்குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர். இதில் திரையுலக பிரபலங்கள் மட்டும் இன்றி பொதுமக்கள் பலரும் கலந்துக்கொண்டு படத்தை பார்த்துள்ளனர். படத்தை பார்த்தவர்கள் அனைவரும், பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த படமாக மட்டும் இன்றி சமூகத்திற்கு குறிப்பாக குடும்பத்திற்கு நல்ல கருத்தை படம் சொல்லியிருக்கிறது. இந்த படம் பெண்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இருப்பதால் நிச்சயம் பெரிய வெற்றி பெறும், என்று கூறியிருக்கிறார்கள்.

 

மேலும், படம் குறித்த நல்ல கருத்துகள் மக்களிடம் வேகமாக பரவி வருவதால், படம் வெளியாவதற்கு முன்பாகவே மக்களிடம் வரவேற்பை பெற்றிருக்கும் ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

எனவே, ‘கட்டா குஸ்தி’ படம் மூலம் விஷ்ணு விஷால் மீண்டும் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கப் போகிறார் என்ற பேச்சு கோலிவுட்டில் அடிபடுகிறது.

Related News

8701

இந்தியா முழுமைக்கும் ஜோய் ஆலுக்காஸின் சேவை விரிவடையும் - நடிகர் பிரஷாந்த் நம்பிக்கை
Monday March-16 2026

தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...

தமிழ் சினிமாவில் நல்ல மாற்றங்கள் வரும் - ஜி.கே.எம்.தமிழ்குமரன் உறுதி
Monday March-16 2026

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க,   திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

Recent Gallery