பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் ‘டி.எஸ்.பி’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படத்திற்கு எந்தவிதமான விளம்பரமும் செய்யாததால், இப்படி ஒரு படம் வெளியாவதே பலருக்கு தெரியாதது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் இப்படம் பற்றிய அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, சில மாதங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் அறிவிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கப் போவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், படத்தின் டிரைலர் மற்றும் அதன் பிறகு வெளியான போஸ்டர்களில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பெயர் இடம்பெறவில்லை. கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் சர்பில் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பு என்று மட்டுமே அறிவிக்கப்பட்டது.
’டி.எஸ்.பி’ படத்தின் ஆரம்ப அறிவிப்பில் இருந்த சன் பிக்சர்ஸ் திடீரென்று காணாமல் போனதன் பின்னணி என்ன? என்று விசாரிக்கையில், படம் முடிந்த உடன் சன் பிக்சர்ஸ் சார்பாக ஒரு குழுவினர் படம் பார்த்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் எதிர்பார்த்தது போல் படம் இல்லையாம். அதுமட்டும் இன்றி, மிக மிக சுமாராக படம் இருந்ததால், இப்படி ஒரு படத்தை தங்களது பேனரில் வெளியிட்டால், சன் குழுமத்திற்கு இருக்கும் தரம் குறைந்துவிடும் என்று கருதிய அக்குழுவினர், இந்த படம் வேண்டாம், நீங்களே எடுத்துட்டு போயிடுங்க என்று சொல்லி, நிராகரித்து விட்டதாக சொல்லப்படுகிறது.
முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி படத்திற்கு இப்படி ஒரு பரிதாப நிலை ஏற்பட்டது குறித்து தற்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுவது ஒரு பக்கம் இருக்க, படத்தின் ரிசல்ட் குறித்து விசாரிக்கையில் அது இதைவிட கொடுமை என்று படம் பார்த்தவர்கள் குமுறுகிறார்கள்.
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...
ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் G...