Latest News :

சோனி லிவ் ஒடிடி தளத்தில் நேரடியாக வெளியாகும் ‘விட்னஸ்’
Saturday December-03 2022

பெருநகரங்கள் குறித்து நாம் இதுவரை கண்டிராத உண்மைகளையும், கண்ணுக்குப் புலப்படாத வகையில் அங்கே செயல்படும் அதிகார மையங்களையும் நமக்கு நெருக்கமாக கொண்டு வந்து சேர்க்கும் வகையில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘விட்னஸ்’. அறிமுக இயக்குநர் தீபக் இயக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்தை தெலுங்கு மற்றும் கன்னடத் திரைத்துறைகளில் மாபெரும் வெற்றிப்படங்களைத் தயாரித்து வெளியிட்ட ‘தி பீப்பிள் மீடியா பேக்டரி’ தயாரித்துள்ளது.

 

தி பீப்பிள் மீடியா பேக்டரி சார்பில் டி.ஜி.விஷ்வபிரசாத் தயாரிக்க, விவேக் குச்சிபோட்லா இணைந்து தயாரித்துள்ள இப்பட்ட்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரோகிணி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் அழகம்பெருமாள், சண்முகராஜா, ஜி.செல்வா, சுபத்ரா ராபர்ட், இராஜிவ் ஆனந்த், எம்.ஏ.கே.இராம் ஆகியோர் முக்கிய வேடங்க்ளில் நடித்திருக்கிறார்கள்.

 

இப்படத்தின் கதை, திரைக்கதையை முத்துவேல் மற்றும் ஜே.பி.சாணக்யா எழுதியுள்ளனர். பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, ரமேஷ் தமிழ்மணி இசையமைத்திருக்கிறார். கபிலன் பாடல்கள் எழுதியுள்ளார்.

 

இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், வருகிற டிசம்பர் 9 ஆம் தேதியன்று சோனி லிவ் ஒடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் ‘விட்னஸ்’ திரைப்படம் நேரடியாக வெளியாகிறது. 

Related News

8704

இந்தியா முழுமைக்கும் ஜோய் ஆலுக்காஸின் சேவை விரிவடையும் - நடிகர் பிரஷாந்த் நம்பிக்கை
Monday March-16 2026

தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...

தமிழ் சினிமாவில் நல்ல மாற்றங்கள் வரும் - ஜி.கே.எம்.தமிழ்குமரன் உறுதி
Monday March-16 2026

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க,   திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

Recent Gallery