தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராஜ்கிரண், தற்போதும் பல படங்களில் முதன்மை கதாபாத்திரங்களிலும், முக்கியமான கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். அவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் தொடர்ந்து வெற்றி பெறுவதால் அவருக்கு பட வாய்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், ராஜ்கிரண் சினிமாவில் பிஸியாக இருப்பதால் அவரிடம் இருந்து பணம் பறிக்க சிலர் திட்டமிட்டிருப்பதோடு, அதற்கு அவரது வளர்ப்பு மகளை பகடைகாயாக பயன்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து விசாரிக்கையில் இந்த விவகாரம் குறித்து அறிந்தவர்கள், ராஜ்கிரண் மற்றும் அவரது மனைவி வளர்ப்புமகளாக இருந்தபோதும் தங்களது சொந்த மகள் போலத்தான் வளர்த்தார்கள் நன்கு படிக்கவைத்து ஆளாக்கினார்கள். காதல் விவகாரத்தில் கூட இந்த வயதில் இதெல்லாம் தவறு என்று அறிவுரை சொல்லி வளர்த்தார்கள். இருந்தாலும் தற்போது ஒருவரை காதலிப்பதாக தெரிவித்தார். அந்த நபரை அழைத்து ராஜ்கிரண் பேசியிருக்கிறார். பிறகு தன் வளர்ப்பு மக்களிடம் அவர் தவறான நபராக இருக்கிறார் வேண்டாம் என்று தெரிவித்தார் ஆனால் அவரைத்தான் நான் கல்யாணம் செய்துகொள்வேன் என்று பிடிவாதமாக இருந்ததால் ராஜ்கிரண் உன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளுமாறு தெரிவித்துவிட்டு நாங்கள் சொல்லியும் கேட்காமல் நீ அவரை திருமணம் செய்துகொண்டால் எங்களுக்கு உனக்கும் எந்த தொடர்பும் இருக்காது எந்த உதவியும் செய்யமாட்டோம் என்று தெரிவித்து விட்டார்.
இந்த நிலையில் அவரது வளர்ப்பு மகள் தான் காதலித்தவரையே திருமணம் செய்துகொண்டு போய்விட்டார். சமீபத்தில் அந்த பெண்ணும் அவரது கணவரும் சேர்ந்து விளம்பர படம் ஒன்றில் ராஜ்கிரண் மகள் என்று சொல்லி நடித்திருக்கிறார். இதனை ராஜ்கிரண் கண்டித்துள்ளார். அவர்களும் இனிமேல் உங்கள் பெயரை பயன்படுத்த மாட்டோம் என்று தெரிவித்தார்கள். அதோடு நிறுத்தாமல் தொடர்ந்து அதை செய்துவந்தார்கள்.
பண தேவை அவர்களுக்கு இருப்பதால் ராஜ்கிரணின் அமைதியை பயன்படுத்தி உங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி, அசிங்கப்படுத்தி காசு பிடுங்கிவிடுவோம் என்று மிரட்டி தங்களுக்கு 30 லட்சத்திற்கு மேல் தரவேண்டும் என்றும் மிரட்டி பிரஷர் கொடுக்கிறார்கள், என்று கூறுகிறார்கள்.
மேலும், இது தொடர்பாக பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கிறது. குறிப்பாக, ராஜ்கிரணிடம் இருந்து எப்படியாவது பணம் பறிக்க திட்டமிடும் கும்பல் ஒன்று அவரது மகளை மூளைச்சலைவை செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இதனால் மிகுந்த மன வருத்தத்தில் நடிகர் ராஜ்கிரண் இருக்க, அவரது நெருங்கிய வட்டாரங்கள், குழந்தையை தத்தெடுத்து தங்கள் குழந்தையாக அன்பையூட்டி வளர்த்தார்கள் அது இப்படியா முடியவேண்டும், பாம்பிற்கு பாலை வார்த்தது போலாகிவிட்டது, என்று குமுறுகிறார்கள்.
மகத் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘காதல் கண்டிஷன் அப்ளை’...
இயக்குநர் பா.இரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் தன்னிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றியவர்களை வைத்து தொடர்ந்து படங்கள் தயாரித்து வருகிறார்...
ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்க, விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் படம் ‘மைக்கேல்’...