Latest News :

மக்களுக்கு சந்தோஷம் தரும் படமாக ‘வரலாறு முக்கியம்’ இருக்கும் - நடிகர் ஜீவா நம்பிக்கை
Sunday December-04 2022

அறிமுக இயக்குநர் சந்தோஷ் ராஜன் இயக்கத்தில், ஜீவா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வரலாறு முக்கியம்’. சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.பி.செளத்ரி தயாரித்திருக்கும் இப்படம் ரொமான் காமெடி ஜானரில் முழுக்க முழுக்க ஜனரஞ்சகமான படமாக உருவாகியுள்ளது.

 

இதில் ஜீவாவுக்கு ஜோடியாக காஷ்மீரா பரதேசி, பிரக்யா நாக்ரா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் வி.டி.விகணேஷ், கே.எஸ்.ரவிக்குமார், மொட்ட ராஜேந்திரன், ஷாரா சரண்யா, டி எஸ் கே, சித்திக் மற்றும் பல நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

 

வரும் டிசம்பர் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டார்கள்.

 

படம் குறித்து நடிகர் ஜீவா பேசுகையில், “SMS படத்திற்கு பிறகு அது போன்று ஒரு படம் வேண்டும் என்று அனைவரும் என்னை கேட்டார்கள். அப்படி ஒரு படமாய் தான் இந்த வரலாறு முக்கியம் வந்துள்ளது. இந்த படத்தின் இயக்குனர் மிகவும்  அதிகமான காமெடி உணர்வு உள்ளவர். அது படத்திலும் பிரதிபலித்துள்ளது. கோவிட் காலகட்டத்தில் தான் இந்த படத்தை உருவாக்கினோம். மக்கள் சந்தோஷமாக படம் பார்க்க வேண்டுமென இப்படத்தை உருவாக்கியுள்ளோம். ஹீரோயின் பிரக்யா மற்றும் காஷ்மீரா இருவருடன் பணியாற்றியது மகிழ்ச்சியை தருகிறது. காஷ்மீரா இதில் மலையாளம் கலந்த தமிழ் பேசி அசத்தியுள்ளார். பிரக்யாவை முன்னதாகவே சோஷியல் மீடியா மூலம் தெரியும். அவருடன்  பகிர்ந்துகொண்டதும், படபிடிப்பு தளத்திலும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. அனைவரது கூட்டு முயற்சியிலும் இந்த படம் உருவாகி உள்ளது. உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.” என்றார்.

 

இயக்குநர் சந்தோஷ் ராஜன் பேசுகையில், “இந்தப்படத்தில் கலகலப்பான ஜீவாவை மீண்டும் பார்க்கலாம். சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் படம் செய்வது எனது கனவு அது நிறைவேறியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. பிரக்யா குஜராத்தி பெண் ஆனால் அவர் ஒரு மலையாளி என அனைவரையும் நம்ப வைத்து விட்டார். அந்தளவு கதாப்பாத்திரத்தில் ஒன்றி நடித்தார். காஷ்மீரா அற்புதமாக நடித்துள்ளார். இந்தப்படம் மிக ஜாலியான படமாக இருக்கும். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும்.” என்றார்.

 

நடிகை பிரக்யா நாக்ரா பேசுகையில், “இது என்னுடைய முதல் படம். அதற்கு இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் எனது நன்றிகள். நான் முதன் முதலில் பார்த்த தமிழ் படம் சிவா மனசுல சக்தி படம் தான். ஜீவா போன்ற சிறந்த நடிகருடன் நடித்தது எனக்கு மகிழ்ச்சி.  இது எனது கனவு நிஜமான தருணம். முதல் படத்திலயே மிகப்பெரிய நட்சத்திரங்களுடன் நடித்தது எனக்கு மிகப்பெரிய விஷயம். இந்த படம் முழுக்க முழுக்க ஒரு பொழுதுபோக்கு திரைப்படம். இந்த படத்திற்கு உங்களது ஆதரவு தேவை. நன்றி.” என்றார்.

 

Varalaru Mukkiyam Press Meet

 

நடிகர் டி எஸ் கே பேசுகையில், “"சூப்பர் குட் பிலிம்ஸில் நான் நடித்தது எனக்கு பெருமையான விஷயம். இயக்குனர் போன்ற ஒரு கூலான மனிதரை பார்க்க முடியாது, மொத்த குழுவையும், நடிகர்களையும் சரியாக வழிநடத்தி படத்தை உருவாக்கியுள்ளார். படம் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவை தாருங்கள்.” என்றார்.

 

நடிகர் ஷாரா பேசுகையில், “இந்த படத்தில் எனக்கு வாய்ப்பளித்த ஜீவா சார், சூப்பர் குட் பிலிம்ஸ்,  இயக்குனர் சந்தோஷ் மூவருக்கும் நன்றி. ஒளிப்பதிவாளர் சக்தி, காமெடி சீனை கொரியோகிராப் செய்வார், அது பலரிடத்தில் இருப்பது இல்லை.  SMS போன்று இதுவும் ஒரு ஜாலியானா படமாக இருக்கும். இந்த படம் கண்டிப்பாக வெற்றியடையும்.” என்றார்.

 

சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஷான் ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். ஸ்ரீகாந்த் என்.பி படத்தொகுப்பு செயெய்ய, மோகன் கலையை நிர்மாணித்துள்ளார். சக்தி சரவணன் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, பிருந்தா நடனம் அமைத்துள்ளார். 

Related News

8706

மகத் போன்ற நடிகர்கள் தமிழ் சினிமாவிற்கு தேவை - தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் பாராட்டு
Thursday February-02 2023

மகத் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘காதல் கண்டிஷன் அப்ளை’...

லெமன் லீப் கிரியேசன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பா.இரஞ்சித் தயாரிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது
Wednesday February-01 2023

இயக்குநர் பா.இரஞ்சித் தனது நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் மூலம் தன்னிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றியவர்களை வைத்து தொடர்ந்து படங்கள் தயாரித்து வருகிறார்...

எனக்கும் சந்தீப்புக்குமான நட்பு மிகவும் ஆழமானது - ‘மைக்கேல்’ பட விழாவில் மனம் திறந்த நடிகை
Tuesday January-31 2023

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்க, விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் படம் ‘மைக்கேல்’...