பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வந்த ‘வணங்கான்’ படம் குறித்து பல்வேறு சர்ச்சையான தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், அவற்றை தயாரிப்பு தரப்பு மறுத்து வந்ததோடு, படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறுவதாகவும் சொல்லி வந்தது. இருப்பினும், அவ்வபோது ‘வணங்கான்’ படம் டிராப்பாகி விட்டதாக தகவல் வெளியாகி கொண்டிருந்தது.
இந்த நிலையில், ‘வணங்கான்’ படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகிவிட்டதாக, இயக்குநர் பாலா இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது குறித்து இயக்குநர் பாலா வெளியிட்டுள்ள அறிவிப்பில், “என் தம்பி சூர்யாவுடன் இணைந்து ‘வணங்கான்’ என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால், கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்தக் கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது.
என் மீதும் இந்தக் கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா. இவ்வளவு அன்பும் மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு, ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்மசங்கம் கூட நேர்ந்துவிடக் கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது.
எனவே ‘வணங்கான்’ திரைப்படத்தில் இருந்து சூர்யா விலகிக்கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி, ஒருமனதாக முடிவெடுத்திருக்கிறோம். அதில் அவருக்கு மிகவும் வருத்தம் தான் என்றாலும், அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது.
நந்தாவில் நான் பார்த்த சூர்யா, ‘பிதாமகன்’-இல் நீங்கள் பார்த்த சூர்யா போல் வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம். மற்றபடி ‘வணங்கான்’ படப்பணிகள் தொடரும்.” என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரித்து வந்த ‘வணங்கான்’ படத்தில் இருந்து சூர்யா விலகினாலும், அப்படத்தின் பணிகள் தொடரும் என்று இயக்குநர் பாலா சொல்லியிருக்கிறார். ஆனால், படத்தை 2டி நிறுவனம் தொடர்ந்து தயாரிக்குமா? அல்லது அதில் சூர்யாவுக்கு பதில் நடிக்கப் போகும் ஹீரோ யார்? போன்ற கேள்விகளுக்கான பதிலை இதுவரை யாரும் சொல்லவில்லை.
Reliance Retail’s premium fashion and lifestyle brand AZORTE made waves in the South with the opening of its all-new store at Phoenix Marketcity, Chennai...
கோதை என்டர்டெய்ன்மென்ட் மற்றும் எஸ்...
தொடர் வெற்றி பட நாயகனான பிரதீப் ரங்கநாதன் நடிப்பில், அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘டியூட்’ திரைப்படம், இந்த தீபாவளி பண்டிகைக்கு அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது...