Latest News :

ஒரே நாளில் 10 லட்சம் பார்வையாளர்களை கடந்த விஜய் ஆண்டனியின் ‘ரத்தம்’ டீசர்
Tuesday December-06 2022

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ரத்தம்’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருவதோடு, ஒரே நாளில் 10 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது.

 

இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் நிறுவனம் சார்பில் கமல் போஹ்ரா, ஜி.தனஞ்செயன், பி.பிரதீப் மற்றும் பங்கஜ் போஹ்ரா ஆகியோர் தயாரித்திருக்கும் இப்படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்க, ரம்யா நம்பீசன், மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

 

கண்ணன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். டி.எஸ்.சுரேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார்.

 

இப்படத்தின் டீசரின் வெளியீட்டு அறிவிப்பே பலரது கவனம் ஈர்த்தது. காரணம், கோலிவுட்டின் முன்னணி இயக்குநர்களான வெங்கட் பிரபு, வெற்றிமாறன், பா.இரஞ்சித் ஆகியோர் ’ரத்தம்’ படத்தின் டீசரில் இணையப் போகிறார்கள், என்பது தான்.

 

இந்த நிலையில், 90 விநாடிகள் ஓடக்கூடிய டீசர் வெளியாகி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருப்பதோடு, இயக்குநர்கள் வெற்றிமாறன், வெங்கட்பிரபு மற்றும் பா. இரஞ்சித் ஆகியோர் படத்தின் கதையோட்டத்தை சொல்லியபடி பார்வையாளர்களை இதன் வலுவான காட்சிகளுக்குத் தயார் படுத்துகிறார்கள். குறிப்பிடத்தக்க வகையில், இந்த அனைத்து விஷயங்களும் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

 

இந்த நிலையில், ‘ரத்தம்’ படத்தின் டீசர் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருப்பதோடு, ஒரே நாளில் 10 லட்சத்திற்கும் அதிமான பார்வையாளர்களை கடந்திருப்பது படக்குழுவினரை உற்சாகப்படுத்தியுள்ளது.

 

Related News

8709

ஜீ5-ன்‘வேடுவன்’ இணையத் தொடர் அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது
Wednesday September-17 2025

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ  அறிவிப்பை வெளியிட்டுள்ளது...

’கிஸ்’ படத்தை நிச்சயம் குடும்பத்துடன் பார்த்து மகிழலாம் - கவின் உறுதி
Wednesday September-17 2025

நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...

கூலி படத்தின் “மோனிகா...” பாடலும், சக்தி மசாலாவின் விளம்பர யுத்தியும்!
Wednesday September-17 2025

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம், திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், அண்மையில் வெளியான அதன் ‘மோனிகா’ பாடல் மூலமாக புதிய விளம்பர உத்தி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது...

Recent Gallery