சரண்யா பொன்வண்ணன் , கோவை சரளா , கல்பனா ஆகிய மூவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘இட்லி’. இவர்களோடு மனோபாலா, தேவதர்ஷினி , வெண்ணிறாடை மூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். நகைச்சுவை கலந்த ஜனரஞ்சகமான படமாக உருவாகியுள்ள இப்படத்தில் இக்காலத்துக்கு தேவையான மெசஜும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் நடிகர் கார்த்தி கலந்துக்கொண்டு டீசரை வெளியிட்டார்.
படம் குறித்து இயக்குநர் வித்யாதரன் கூறுகையில், “திட்டமிட்டப்படி 29தே நாட்களில் படபிடிப்பை முடித்துள்ளார் இயக்குநர் வித்யாதரன். வழக்கமான கமர்ஷியல் படங்களிலிருந்து மாறுபட்டு வித்யாசமான கதையை எழுதி இயக்க வேண்டும், அது கமர்ஷியலாகவும் இருக்க வேண்டும் என்பது எனது ஆசை. அப்படி யோசிக்கும் போது தான் இப்படத்தின் கதை எனக்கு மனதில் வந்தது. வயதான மூன்று பாட்டிகள் தான் ஹீரோ. அவர்கள் எதிர்கொள்ளும் சம்பவங்கள் தான் கதை. படத்தில் பாடல்கள், ஆக்சன் காட்சிகள் என்று எதுவும் கிடையாது. இது தான் இட்லி படத்தின் ஸ்பெஷல். இது அனைவரையும் சிரிக்க வைக்கும் சிந்திக்க வைக்கும் படமாக இருக்கும். நான் படத்தின் கதையை சரண்யா பொன்வண்ணனிடம் முதலில் கூறிய போது நாங்கள் துப்பாக்கி தூக்கி ஒரு காட்சியில் வந்தால் சரியாக இருக்குமா? மக்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்று சந்தேகத்தோடு கேட்டார்... படபிடிப்பில் அந்த காட்சியில் நடிக்கும் போது கூட நடிகைகள் மூவருக்கும் அந்த சந்தேகம் இருந்தது. நடித்து முடித்து அந்த காட்சியை டப்பிங்கில் பார்க்கும் போது அனைவருக்கும் மனநிறைவாக இருப்பதாக கூறினார்கள்.” என்று தெரிவித்தார்.
அப்பு மூவிஸ் சார்பில் அப்பாஸ் தூயவன் தயாரித்துள்ள ‘இட்லி’ வரும் நவம்பர் மாதம் வெளியாக உள்ளது.
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...
தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளர், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகராக வலம் வரும் சித்ரா லட்சுமணன், ‘டூரிங் டாக்கீஸ்’ என்ற பெயரில் யூடியுப் சேனல் ஒன்றை தொடங்கி நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் என ஏராளமான திரை கலைஞர்களை நேர்காணல் கண்டு பல அறிய தகவல்களை வெளியிட்டு வருகிறார்...