Latest News :

முதியவர்களின் குழந்தை பருவத்தை புரிய வைக்கும் படம் ‘Hi 5’ - இயக்குநர் பாஸ்கி டி.ராஜ்
Tuesday December-06 2022

பாஸ்கெட் பிலிம் & கிரியேஷன்ஸ் தயாரிப்பில் புதுமுகங்களின் நடிப்பில், இயக்குநர் பாஸ்கி டி.ராஜ் இயக்கத்தில் உறவுகளின் அருமைகளை கூறும் திரைப்படம்  ’Hi 5’. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீடு படக்குழுவினர் மற்றும் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.

 

படம் குறித்து தயாரிப்பாளரும் இயக்குநருமான பாஸ்கி டி.ராஜ் பேசுகையில், “இப்படம் எடுப்பதற்கு உதவிய அனைத்து கலைஞர்களுக்கும், நடிகர்களுக்கும் இங்கு வந்து எங்களை வாழ்த்திய பிரபலங்களுக்கும் நன்றி. முதியவர்கள் இரண்டாம் குழந்தைப்பருவத்தில் இருப்பவர்கள் ஆனால் வீட்டில் உள்ளவர்கள் அவர்களை புரிந்து கொள்வதில்லை. முதியவர்களை புரிந்து கொள்ள சொல்வது தான் இந்தப்படம். சிறுவர்களின் பார்வையில் இப்படத்தை சொல்லியுள்ளோம்.  படத்தை பார்த்து உங்கள் கருத்துக்களை கூறுங்கள். படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.” என்றார்.

 

இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசுகையில், “டிரெய்லர் பார்க்கும் போது மிக நீண்ட காலம் கழித்து ஒரு ஆங்கில படம் பார்த்த உணர்வு வருகிறது. கனடாவில் எடுத்துள்ளார்கள். ஒரு நல்ல கருத்தை சொல்ல வந்திருக்கிறார்கள். இந்த படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.  நடிகர்கள் யாரும் புதிய முகங்கள் போல் தெரியவில்லை. நன்றாக நடித்துள்ளனர். இந்தக்குழுவிற்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.” என்றார்.

 

எழுத்தாளர் அஜயன் பாலா பேசுகையில், “இந்தப்படம் அன்பைப்பற்றிய படமாக தெரிகிறது. நல்ல எண்ணங்களால் வாழ்பவர்களே  நீண்ட காலம் வாழ்கிறார்கள், மறைந்தும் வாழ்கிறார்கள். அதே போல் நல்ல எண்ணங்களால் இப்படத்தை எடுத்துள்ளார்கள். இந்தப்படத்தில் கிராமமும் இருக்கிறது, நகரமும் இருக்கிறது. இப்படம் வயதானவர்களின் வலியை சொல்கிறது. இன்று உலகம் முழுக்கவே வயதானவர்களை பார்த்து கொள்ள  ஆளில்லை என்ற பிரச்சனை தான் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப்படம் அதைப்பற்றி பேசுவது மகிழ்ச்சி. படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்.” என்றார்.

 

பாடகர் கானா பாலா பேசுகையில், “ஒரு பாடகரான என்னை மேடைக்கு அழைத்ததற்கு நன்றி. படத்தை நன்றாக எடுத்துள்ளார்கள்.  பாடல்கள் நன்றாக வந்துள்ளது. படத்தை சிறப்பாக உருவாக்கிய குழுவிற்கு எனது வாழ்த்துக்கள்.  தந்தைக்கும் மகனுக்குமான கதை. அனைவருக்கும் பிடிக்கும் எல்லோருக்கும் நன்றி.” என்றார்.

 

தயாரிப்பாளர் கே ராஜன் பேசுகையில், “இந்த மேடை அழகாக இருக்கிறது. ஒரு காலத்தில் உறவுகளை போற்றியது தமிழ்நாடு. இப்போது ஒரே வீட்டில் ஆளுக்கொரு ரூமில் இருக்கிறார்கள் வயதனாவர்களை யாரும் கவனிப்பதில்லை. அந்த வலியை இந்த சினிமா சொல்கிறது. வாழ்த்துக்கள். வாரிசு படம் தெலுங்கில் தியேட்டர் கிடைக்க வில்லை என கவலைப்படுகிறார்கள். தெலுங்கில் கிடைக்காவிட்டால் உனக்கென்ன கவலை. இங்கே லட்சக்கனக்கில் தொழிலாளர்கள் இருக்கிறார்கள் இங்கேயா அந்தப்படத்தை எடுத்தார்கள். இங்கே இந்த மாதிரி சின்ன படம் தான் ஓட வேண்டும். நல்ல கதையை சொல்லும் இந்தப்படம் ஓட வேண்டும்.  இப்படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.” என்றார்.

 

ஸ்டண்ட் இயக்குநர் ஜாக்குவார் தங்கம் பேசுகையில், “நம் நாட்டில் ஆயிரம் வருடம் வாழ்ந்தவர்கள் இருக்கிறார்கள். வாழ்க்கையில் ஒழுக்கம் என்பது மிக முக்கியம். ஒழுக்கத்தோடு வாழ்ந்தால் 100 ஆண்டுகள் கடந்தும் வாழலாம். மதுப்பழக்கம் இல்லாமல் வாழுங்கள். இந்தப்படம் ஒரு முதியவரின் சொத்தை அடைவதற்காக அவரது பிள்ளைகள் ஏமாற்றும் கதையை சொல்கிறது. இந்த நிலை உலகம் முழுக்க இருக்கிறது. பெற்ற அம்மா அப்பாவை போற்ற வேண்டும். அம்மா அப்பாவை வணங்குபவன் தான் வாழ்வில் ஜெயிக்க முடியும்.  இந்த Hi 5 படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்.” என்றார்.

 

இயக்குநர் பேரரசு பேசுகையில், “சினிமாவில் இளைஞர்களை காட்டி வெற்றி அடைவது எளிதானது ஆனால் வயதானவர்களை காட்டி வெற்றி அடைவது கஷ்டம் ஆனால் அதில் நீங்கள் சாதிப்பீர்கள். முதுமைக்காலம் தான் நம் வாழ்வில் முக்கியமானது நாம் அந்த காலகட்டத்தில் தான் நமக்கு பிடித்ததை செய்ய ஆணைப்பட்டு வாழுகிறோம்.  முதுமை காலத்தின் வலிகளை சொல்லும் படத்தை தரும் இந்த படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்.” என்றார்.

Related News

8710

துல்கர் சல்மானை நடிப்பு சக்கரவர்த்தியாக மக்கள் கொண்டாடுவார்கள் - நடிகர் ராணா பாராட்டு
Thursday November-06 2025

இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...

சினிமாவில் வெற்றி பெற 4 விசயங்கள் அவசியம்! - இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்
Thursday November-06 2025

பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...

’ஆர்யன்’ பட கிளைமாக்ஸ் மாற்றம்! - வெற்றி விழாவில் படக்குழு தகவல்
Wednesday November-05 2025

அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

Recent Gallery