Latest News :

அமீர் நடிப்பில் உருவாகியுள்ள ‘உயிர் தமிழுக்கு’ படத்தை கைப்பற்றிய சுரேஷ் காமாட்சி!
Wednesday December-07 2022

தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான சுரேஷ் காமாட்சி, தனது வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரித்த ‘மாநாடு’ மிகப்பெரிய வெற்றி பெற்றது. அப்படத்தை தொடர்ந்து ‘ஜீவி 2’ படத்தை தயாரித்து வெளியிட்டவர் தற்போது இயக்குநர் ராம் இயக்கத்தில் ‘ஏழுகடல் ஏழுமலை’ மற்றும் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா இயக்கத்தில், சமுத்திரக்கனி நடிக்கும் ‘ராஜாகிளி’ ஆகிய படங்களை தயாரித்து வருகிறார்.

 

இந்த நிலையில், இயக்குநர் அமீர் கதாநாயகனாக நடித்துள்ள ‘உயிர் தமிழுக்கு’ படத்தின் வெளியீட்டு உரிமையை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கைப்பற்றியுள்ளார்.

 

மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம் பாவா தயாரித்து இயக்கியிருக்கும் இப்படத்தில் அமீருக்கு ஜோடியாக சாந்தினி ஸ்ரீதரன் நடித்திருக்கிறார். இவர்களுடன் ஆனந்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்பிரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

 

‘உயிர் தமிழுக்கு’ படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்ய, அசோக் சார்லஸ் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். இந்தப் படத்திற்கு மொலோடி கிங் வித்யாசாகர்  இசையமைத்துள்ளார்.

 

பாடல்களை பா.விஜய் எழுத, அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தின் வசனங்களை பாலமுரளி வர்மன் மற்றும் அஜயன் பாலா இருவரும் இணைந்து எழுதியுள்ளனர்.

 

இந்தப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

 

’உயிர் தமிழுக்கு’ படத்தை தயாரித்து இயக்கியிருக்கும் ஆதம் பாவா, ஏற்கனவே யூடியூப் விமர்சகர் இளமாறன் இயக்கத்தில் வெளியாகி விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற 'ஆன்டி இண்டியன்' படத்தை தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related News

8712

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

Recent Gallery