பள்ளிக்காலத்தின் அழகான நினைவுகளையும், பள்ளிகால வாழ்க்கையை பிரதிபலிக்கும் திரைப்படமாக உருவாகிறது ’பாபா பிளாக் ஷீப்’. ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் தயாரிக்கும் இப்படத்தின் மூலம் பேச்சாளர் ராஜ் மோகன் இயக்குநராக அறிமுகமாகிறார்.
ஆர்ஜே விக்னேஷ் காந்த், அயாஸ், நரேந்திர பிரசாத் மற்றும் பிளாக் ஷீப் குழுவினர் முதன்னை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைக்கிறார். சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவு செய்கிறார்.
விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்ய, மாதவன் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். ஸ்டன்னர் சாம் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, அசார் நடனம் அமைக்கிறார். யுகபாரதி, ஏ.பி.ஏ.ராஜா, வைசாக் ஆகியோர் பாடல்கள் எழுதுகிறார்கள்.

இன்று பூஜையுடன் தொடங்கிய ‘பாபா பிளாக் ஷீப்’ திரைப்படத்தை 2023 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...
ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் G...