குடி போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கு தொடர்பாக நடிகர் ஜெய் நீதிமன்றத்தில் நேரில் ஆஜாரானார்.
கடந்த 21 ஆம் தேதி நடிகர் ஜெய் மது அருந்திவிட்டு கார் ஓட்டினார், சென்னை அடையாறு மேம்பாலத்தில் கார் வந்த போது விபத்துக்குள்ளானது. இதில் ஜெய்க்கு எந்த காயமும் ஏற்படவில்லை. அருகில் இருந்து போலீசார் ஜெய்யை மீட்ட போது, அவரால் நிற்க கூட முடியாத அளவுக்கு செம போதையில் இருந்ததாக கூறப்பட்டது.
குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதோடு, வாகனத்தில் இன்சூரன்ஸ், ஆர்.சி புக் உள்ளிட்ட எதையும் ஜெய் வைத்திருக்கவில்லையாம். இது போதாது என்று ஏற்கனவே இது போல மது அருந்திவிட்டு இரண்டு முறை அபராதமும் கட்டியிருக்கிறாராம்.
இதனால் ஜெய் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு போட்டனர். இந்த வழக்கு விசாரணை நேற்று சைதாபேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது ஜெய் நீதிமன்றத்திற்கு நேரில் வந்தார்.
காரியிலேயே அமர்ந்திருந்த ஜெய், பத்திரிகைகாரர்கள் யாரும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்ட பிறகே, காரை விட்டு இறங்கியதாக கூறப்படுகிறது. மேலும், அவர் நீதிமன்றத்திற்கு வரும் தகவல் ரகசியமாக வைக்கப்பட்டதாம்.
இந்த வழக்கு விசாரணை நாளையும் நடைபெறும் என்று கூறப்படுகிறது. அதனால், நாளை ஜெய் மீண்டும் நீதிமன்றத்திற்கு வருவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...