Latest News :

ஐயப்பனுக்கு விரதம் இருந்து சபரிமலை சென்ற ‘நந்தன்’ படக்குழு!
Friday December-16 2022

’கத்துக்குட்டி’, ‘உடன்பிறப்பே’ ஆகிய படங்களை இயக்கிய இரா.சரவணன் இயக்கும் மூன்றாவது படம் ‘நந்தன்’. இதில் நாயகனாக சசிகுமார் நடிக்க, அவருக்கு ஜோடியாக சுருதி பெரியசாமி நடிக்கிறார். இவர்களுடன் இயக்குநர் பாலாஜி சக்திவேல், துரை சுதாகர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

 

புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டப் பகுதிகளில் படமாக்கப்பட்டு வரும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் வெளியிட்டார். சசிகுமார் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் புகைப்படத்தோடு வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வைரலாகி சமூக வலைதளங்களில் டிரெண்டானது.

 

இந்த நிலையில், நாயகன் சசிகுமார், படத்தின் இயக்குநர் இரா.சரவணன் மற்றும் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் துரை சுதாகர் ஆகியோர் ஐயப்பனுக்கு விரதம் இருந்து சபரிமலைக்கு சென்று வந்துள்ளனர்.

 

முதல் முறையாக மாலை போட்டு சபரிமலை சென்று வந்திருக்கும் நடிகர் சசிகுமார், கடந்த சில நாட்களாக விரதம் இருந்தவாரே ‘நந்தன்’ படப்பிடிப்பில் கலந்துக்கொண்டார். பிறகு மதுரையில் உள்ள ஐய்யப்பன் கோவிலில் சக ஐய்யப்ப பக்தர்களுடன் கூட்டத்தோடு கூட்டமாக இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலை புறப்பட்டு சென்றார்.

 

Sasikumar and Durai Sudhakar

 

சசிகுமாருடன் இயக்குநர் இரா.சரவணன், நடிகர் துரை சுதாகர் என ‘நந்தன்’ படக்குழு சபரிமலைக்கு சென்று வந்திருக்கிறார்கள். சசிகுமாரைப் போல் இயக்குநர் இரா.சரவணன்,  நடிகர் துரை சுதாகர் ஆகியோரும் முதல் முறையாக சபரிமலைக்கு சென்றுள்ளனர்.

 

ஏற்கனவே பர்ஸ்ட் லுக் போஸ்டரால் டிரெண்டிங்கான ‘நந்தன்’ தற்போது படக்குழுவினரின் சபரிமலை பயணத்தாலும் வைரலாகி வருகிறது.

Related News

8723

இந்தியா முழுமைக்கும் ஜோய் ஆலுக்காஸின் சேவை விரிவடையும் - நடிகர் பிரஷாந்த் நம்பிக்கை
Monday March-16 2026

தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...

தமிழ் சினிமாவில் நல்ல மாற்றங்கள் வரும் - ஜி.கே.எம்.தமிழ்குமரன் உறுதி
Monday March-16 2026

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க,   திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

Recent Gallery