Latest News :

தயாரிப்பாளரான இயக்குநர் அறிவழகன்!
Saturday December-17 2022

’ஈரம்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அறிவழகன், தனது முதல் படத்திலேயே ஒட்டுமொத்த திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தார். அப்படத்தை தொடர்ந்து ‘வல்லினம்’, ‘ஆறாது சினம்’, ‘குற்றம் 23’ ஆகிய வெற்றி படங்களை இயக்கியவர் ‘தமிழ் ராக்கர்ஸ்’ என்ற இணைய்த் தொடரையும் இயக்கினார்.

 

அருண் விஜயை வைத்து அறிவழகன் இயக்கியிருக்கும் ‘பார்டர்’ விரைவில் வெளியாக உள்ள நிலையில், அவர் தனது புதிய படத்தை அறிவித்துள்ளார். இந்த முறை இயக்குநராக மட்டும் இன்றி தயாரிப்பாளராகவும் அறிவழகன் களம் இறங்குகிறார்.

 

ஆல்பா பிரேம்ஸ் என்ற நிறுவனம் மூலம் 7ஜி பிலிம்ஸ் சிவாவுடன் இணைந்து அறிவழகன் தயாரிக்கும் புதிய படத்திற்கு ‘சப்தம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் ஆதி நாயகனாக நடிக்கிறார்.

 

திரில்லர் படங்களை தனக்கே உரிய  தனித்த திரைக்கதையில் வெற்றிப்படங்களாக மாற்றிய அறிவழகன், தயாரிப்பாளராக தனது புதிய பயணத்தை துவங்கியுள்ளார். 

 

Sabdham Movie Launch

 

ஈரம் படம் மூலம் மாபெரும் வெற்றியை தந்த அறிவழகன், ஆதி  வெற்றிக் கூட்டணி இப்புதிய படத்தில் இணைகிறது. ஈரம் படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில், ரசிகர்களை உறைய வைக்கும் திகில் திரில்லராக  இப்படம் உருவாகவுள்ளது. இப்படத்தின் தமன் இசையமைக்கிறார்.

 

இப்படத்தின் துவக்க விழா பூஜையுடன் சமீபத்தில் நடைபெற்றது. பத்தில் பணியாற்ற உள்ள மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.

Related News

8724

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

Recent Gallery