‘காதலில் சொதப்புவது எப்படி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான பாலாஜி மோகன், ‘வாயை மூடி பேசவும்’, ‘மாரி’, ‘மாரி 2’ ஆகிய படங்களை இயக்கினார்.
இந்த நிலையில், சமீபகாலமாக இயக்குநர் பாலாஜி மோகன் குறித்து பல சர்ச்சையான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக அவர் நடிகை ஒருவருடன் காதல் வயப்பட்டிருப்பதாக தகவல் வெளியான நிலையில், அந்த நடிகையை அவர் ரகசிய திருமணம் செய்துக்கொண்டதாகவும் சொல்லப்பட்டது.
ஆனால், அந்த நடிகை யார்? என்ற விவரம் வெளியாகமல் இருந்த நிலையில், தற்போது அந்த நடிகை பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
‘7ஆம் அறிவு’, ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘நீதானே என் பொன்வசந்தம்’, ‘ராஜா ராணி’ போன்ற படங்களில் துணை நடிகையாக நடித்து வந்த பெங்களூரை சேர்ந்த தன்யா பாலகிருஷ்ணனை தான் இயக்குநர் பாலாஜி மோகன் திருமணம் செய்துகொண்டதாக சொல்லப்படுகிறது.

நீண்ட நாட்களாக காதலித்து வந்த இயக்குநர் பாலாஜி மோகன் - தன்யா பாலகிருஷ்ணன் ரகசியமாக திருமணம் செய்துக்கொண்டு ஒன்றாக குடும்பம் நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.
இயக்குநர் பாலாஜி மோகன் ஏற்கனவே திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...
ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் G...