Latest News :

வித்தியாசமான சஸ்பென்ஸ் த்ரில்லர் படமான ‘புரொஜக்ட் சி - சாப்டர் 2’ - டிசம்பர் 23 ஆம் தேதி வெளியாகிறது
Monday December-19 2022

சார்க் பின் ஸ்டுடியோஸ் (Shark Fin Sttudios) நிறுவனம் சார்பில் ஸ்ரீ தயாரித்திருக்கும் படம் ’புரொஜக்ட் சி - சாப்டர் 2’ (Project C - Chapter 2). 2018 ஆம் ஆண்டு வெளியான ‘மங்கை மான்விழி அம்புகள்’ என்ற படத்தை இயக்கிய வினோ இயக்கும் இரண்டாவது படமான இப்படத்தில் ஸ்ரீ, வசுதா கிருஷ்ணமூர்த்தி, சாம்ஸ், ராம்ஜி, கோவை குருமூர்த்தி ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

 

ரம்மி போன்ற விளையாட்டு போல் நகரும் இப்படத்தின் கதையில் இடம் பெறும் ஐந்து முக்கிய கதாப்பாத்திரங்களில் ஒவ்வொருவரும் ஒரு குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு இடையே நடைபெறும் இந்த விளையாட்டில் யார் ஜெயிப்பார்கள் என்பது படத்தை விறுவிறுப்பாக நகர்த்துவதோடு, இவர்களிடம் இருக்கும் போட்டி குணம் படம் பார்ப்பவர்களை சீட் நுணியில் உட்கார வைக்கும் அளவுக்கு படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்லும்.

 

தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவராத ஒரு புதிய முயற்சியோடு வித்தியாசமான சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தின் திரைக்கதையும், படத்தில் வரும் முதன்மை கதாப்பாத்திரங்களின் வடிவமைப்பும் இதுவரை எந்த ஒரு படத்திலும் பார்த்திராத வித்தியாசமாக இருப்பதோடு, பேசப்படும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

 

மொத்தம் மூன்று பாகங்களாக உருவாக உள்ள இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகமான ‘புரொஜக்ட்  சி - சாப்டர் 2’ தான் முதலில் வெளியாக உள்ளது. பொதுவாக பல பாகங்களாக வெளியாகும் படங்கள் முதல் பாகம் வெளியான பிறகு தான் அதன் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகும். ஆனால், இப்படக்குழு சற்று வித்தியாசமாக முதலில் இரண்டாம் பாகத்தை வெளியிடுகிறார்கள்.

 

இது குறித்து தயாரிப்பாளரும், படத்தின் ஹீரோவுமான ஸ்ரீயிடம் கேட்ட போது, ”டிரமாட்டிக் சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் ‘புரொஜக்ட்  சி - சாப்டர் 2’. தமிழ் சினிமாவில் இப்படி ஒரு படம் வந்ததில்லை, என்று சொல்லும் அளவுக்கு படத்தை வித்தியாசமான முறையில் எடுத்துள்ளோம். படம் போலவே படத்தின் வெளியீடும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று  தான் முதலில் இரண்டாம் பாகத்தையும் வெளியிடுகிறோம். இரண்டாம் பாகத்தை பார்க்கும் போது, முதல் பாகத்தில் என்ன நடந்திருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்படுவதோடு, அதன் தொடர்ச்சி மிக எளிமையாக புரியும்படியும் இருக்கும்.” என்றார்.

 

இப்படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கும் வசுதா கிருஷ்ணமூர்த்தி, ஏற்கனவே ‘சிஸ்டர்’ என்ற ஆங்கிலப் படத்தில் நடித்திருக்கிறார். அப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதும் அவர் வென்றிருக்கிறார். அதேபோல், படத்தில் ஹீரோ, ஹீரோயின் என்று இல்லாமல், ஐந்து கதாப்பாத்திரங்களுக்கும் முக்கிய பங்கு கொடுக்கப்பட்டுள்ளாதாம். 

 

இப்படத்திற்கு சிபு சுகுமாரன் இசையமைத்துள்ளார். இவர் சுமார் 12 மலையாள படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழில் இது தான் முதல் படம். சதிஷ் ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் ‘அடங்க மறு’, ‘அண்ணாதுரை’ போன்ற படங்களில் உதவியாளராக பணியாற்றியுள்ளார். தினேஷ் காந்தி படத்தொகுப்பு செய்துள்ளார். சித்தின் கும்புக்காடு டிஐ செய்துள்ளார். 

 

படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள் உள்ளது. மூன்று பாடல்களும் மிகப்பெரிய ஹிட் பாடல்களாக உருவாகியிருப்பதோடு, படத்தின் பீஜியமும் மிகப்பெரிய அளவில் பேசப்படும் விதத்தில் அமைந்துள்ளது.

 

இந்த நிலையில், ‘புரொஜக்ட்  சி - சாப்டர் 2’  திரைப்படம் வரும் டிசம்பர் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.  தமிழகம் முழுவதும் இப்படத்தை ஆக்ஷன் - ரியாக்ஷன் சார்பில் ஜெனிஷ் வெளியிடுகிறார்.

Related News

8730

இந்தியா முழுமைக்கும் ஜோய் ஆலுக்காஸின் சேவை விரிவடையும் - நடிகர் பிரஷாந்த் நம்பிக்கை
Monday March-16 2026

தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...

தமிழ் சினிமாவில் நல்ல மாற்றங்கள் வரும் - ஜி.கே.எம்.தமிழ்குமரன் உறுதி
Monday March-16 2026

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க,   திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

Recent Gallery