இளைஞர்களின் நட்பு மற்றும் அண்ணன் தங்கை பாசத்தை மையப்படுத்தி உருவாகும் படம் ‘கும்பாரி’. ராயல் எண்டரிரைசஸ் சார்பில் குமாரதாஸ் தயாரிப்பில், கெவின் ஜோசன் எழுதி இயக்குகிறார்.
விஜய் விஷ்வா மற்றும் நலீல் ஜியா நாயகர்களாக நடிக்கும் இப்படத்தில் மஹானா சஞ்சீவி நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ஜான் விஜய், பருத்திவீரன் சரவணன், சாம்ஸ், மதுமிதா, செந்தி, காதல் சுகுமார் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

ஜெய்பிரகாஷ், ஜெய்சன், பிரித்வி ஆகியோர் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பிரசாத் ஆறுமுகம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மிராக்கில் மைக்கேல் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, ராஜு முருகன் நடனம் அமைத்துளார். டி.எஸ்.ஜெய் படத்தொகுப்பு செய்துள்ளார்.
சமீபத்தில் வெளியான இந்த படத்தின் முதல் பாடலான கும்பாரி பாடல் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
பொங்கலுக்கு பிறகு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ள படக்குழு இது பற்றிய அறிவிப்பை விரைவில் அறிவிக்க உள்ளது.
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...
ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் G...