விஜய் ஆண்டனியின் மிகப்பெரிய வெற்றி படங்களில் ‘பிச்சைக்காரன்’ முக்கியமான படம். தமிழ் மட்டும் இன்றி தெலுங்கிலும் 100 நாட்களை கடந்து ஓடிய இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.
இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் விஜய் ஆண்டனி, விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் மூலம் படத்தை தயாரிக்கவும் செய்கிறார்.
இதற்கிடையே விஜய் ஆண்டனி நடித்து வரும் படங்கள் அனைத்தும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், 'பிச்சைக்காரன் 2' படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. இதற்கு 'பிச்சைக்காரன்' படத்தின் வெற்றியும் ஒரு காரணமாக அமைந்திருக்கிறது. மேலும் 'பிச்சைக்காரன் 2' படத்தின் 'ஆண்டி- பிகில்' என்ற ரசிகர்களைக் கவரும் சொல்லாடலும் படத்திற்கு கூடுதல் கவர்ச்சியைக் கொடுத்துள்ளது.
தற்போது, படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமத்தை இந்தியா முழுவதும் ஸ்டார் நெட்வொர்க் கைப்பற்றியுள்ளது என்பதை படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷனின் தயாரிப்பாளர் பாத்திமா விஜய் ஆண்டனி கூறுகையில், ”ஸ்டார் விஜய் போன்ற மதிப்புமிக்க மிகப்பெரிய நிறுவனத்தில் இந்தப் படம் சேர்ந்திருப்பது ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் மகிழ்ச்சியளிக்கும். படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் 80% நிறைவடைந்துள்ளது.” என்றார்.
2023 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் ‘பிச்சைக்காரன் 2’ படத்தை வெளியிட முடிவு செய்துள்ள படக்குழு அதற்கான தேதியை விரைவில் அறிவிக்க உள்ளனர்.
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...
ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் G...