Latest News :

விற்பனைக்கு வரும் விஜய் சேதுபதி காலண்டர்!
Saturday December-24 2022

சர்வதேச அளவில் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞரான எல்.ராமச்சந்திரன் கடந்த இரண்டு வருடங்களாக நடிகர் விஜய் சேதுபதியை வைத்து ஆண்டு காலண்டர் வெளியிட்டு வருகிறார்.

 

‘ஹூயூமன்’ மற்றும் ‘கலைஞன்’ என்ற தலைப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜய் சேதுபதி - எல்.ராமச்சந்திரன் கூட்டணி காலாண்டர் வெளியிட்ட நிலையில், மூன்றாவது ஆண்டாக 2023 ஆம் ஆண்டுக்கான காலண்டரை ’தி ஆர்டிஸ்ட்’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளனர்.

 

ஓவியர், சிற்பி, கிராபிடி ஆர்டிஸ்ட் என பல பரிமாணங்களில் விஜய் சேதுபதியை புகைப்படம் எடுத்து, அதனை வண்ணமயமான காலண்டராக உருமாற்றியுள்ளார் சர்வதேச புகைப்பட கலைஞர் எல்.ராமசந்திரன்.

 

இந்த படைப்பிற்காக நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் சுமார் 10 நாட்களுக்கும் மேலாக அயராது உழைத்து 12 கண்கவர் செட்டுகளை, ஒவ்வொன்றையும் தனித்துவமான தலைப்பில் (Theme) வடிவமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இது குறித்து கூரிய எல்.ராமச்சந்திரன், “கலையும் கற்பனையும், பல சமூக மாற்றங்களை நிகழ்த்தியுள்ளது. பல முன்னெடுப்புகளுக்கு ஆதாரமாய் இருந்துள்ளது. பலரையும் மகிழ்வித்து வருகிறது. அவ்வாறான எல்லா கலைஞர்களுக்கும் இந்த ’ஆர்டிஸ்ட்’ சமர்ப்பணம். அயராத பணிச்சுமைகளுக்கு மத்தியிலும் இந்த கருத்துப்படிவத்திற்காக (கான்செப்ட்) உடனே நேரம் கொடுத்த விஜய் சேதுபதிக்கு தனது மனமார்ந்த நன்றிகள்.

 

தன்னுடைய பணிகளில் முழு அர்ப்பணிப்புடனும் தன்னம்பிக்கையுடனும் செயலாற்றும் நடிகர்களில் விஜய் சேதுபதிக்கு என்றுமே ஒரு தனி இடம் உண்டு.  இந்த படத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு தலைப்பிற்கும், அந்தந்த துறை சார்ந்த நிபுணர்களை அணுகி, அதன் நுணுக்கங்களை உள்வாங்கி, அந்தந்த கதாபாத்திரமாகவே தன்னை மாற்றியிருக்கிறார் விஜய் சேதுபதி என்பதை நீங்கள் முதல் பார்வையிலேயே உணரலாம்.” என்றார்.

 

Vijay Sethupathi Calendar

 

கடந்த ஆண்டுகளைக் காட்டிலும், இத்தொகுப்பு ஒரு மாறுபட்ட புதிய பாணியில் இருப்பதை நீங்கள் உணரலாம். சர்வதேச தரத்தில், ஒவ்வொரு மாதத்திற்கும் இரண்டு புகைப்படங்கள் என 24 புகைப்படங்களோடு, அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

மேலும், இந்த ‘தி ஆர்டிஸ்ட்’ காலண்டரை விற்பனைக்கும் கொண்டு வந்துள்ளனர். இதன் மூலம் கிடைக்கப்பெறும் வருவாய், காசா அறக்கட்டளை மூலம் கல்வி மற்றும் மருத்துவ நலன்களுக்காக பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஆர்டிஸ்ட் காலண்டர் store.lramachandran.com, அமேசான் போன்ற இணையதளங்களிலும் மற்றும் முன்னணி புத்தகக் கடைகளிலும் விற்பனைக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

8739

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

Recent Gallery