கர்நாடக மாநிலம், பெங்களூரில் மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டு கொலை செய்யப்பட்ட விவாகரத்தில், நடிகர் பிரகாஷ் ராஜ், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார்.
கவுரி லங்கேஷ் கொலையை சிலர் கொண்டாடுவதாகவும், அவர்கள் அனைவரும் பிரதமர் மோடியை பின்பற்றுபவர்கள், என்றும் கூறினார். மேலும், இந்த விஷயத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பதினால், அவர் என்னை விட சிறந்த நடிகராக முயற்சிக்கிறார், என்றும் தெரிவித்தார்.
பிரகாஷ் ராஜின் பேச்சுக்கு பா.ஜ.க-வினர் கடும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், பிரதமர் மோடியை அவதூறாக பேசியதாக உத்தரபிரதேச மாநிலம் லக்னோ நீதிமன்றத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...
தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளர், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகராக வலம் வரும் சித்ரா லட்சுமணன், ‘டூரிங் டாக்கீஸ்’ என்ற பெயரில் யூடியுப் சேனல் ஒன்றை தொடங்கி நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் என ஏராளமான திரை கலைஞர்களை நேர்காணல் கண்டு பல அறிய தகவல்களை வெளியிட்டு வருகிறார்...