Latest News :

வரலட்சுமி சரத்குமாரின் தூள் கிளப்பும் ஆக்‌ஷனில் உருவான ‘அரசி’
Monday December-26 2022

வரலட்சுமி கதையின் நாயகியாக நடிக்கும் படம் ‘அரசி’. ரசி மீடியா மேக்கர்ஸ், வி.வி.பிலிம்ஸ் சார்பில் ஏ.ஆர்.கே.ராஜராஜா, ஆவடி சே.வரலட்சுமி  தயாரிக்கும் இப்படத்தை சூரியகிரன் இயக்குகிறர்.

 

வரலட்சுமி சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் கார்த்திக் ராஜு,அங்கனாராய், மனிஷா ஜஸ்னானி, சித்தார்த்தராய், அபிஷேக் வினோத், ஹாசினி, சுப்ரமணியம் சிவா,சாப்ளின் பாலு, மோகித் ராஜ், ஆகியோருடன் விஜய் டிவி புகழ் ஹரி,சிவா மதன்,சக்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

 

வழக்கறிஞர், காவல்துறை அதிகாரி மற்றும் ரவுடி ஆகிய மூன்று பேருக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்திற்கு செல்வா.ஆர் ஒளிப்பதிவு செய்ய, சித்தார்த் விபின் இசையமைக்கிறார். ஆவடி சே.வரலட்சுமி, அருண்பாரதி, நிலவை பார்த்திபன், கானா பிரபா ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். தீனா நடனம் அமைக்க, மிரட்டல் செல்வா சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

 

இப்படத்தில் 4 பாடல்கள் இடம்பெற்றுள்ளது. படத்தின் தயாரிப்பாளர் ஆவடி சே.வரலட்சுமி எழுதியிருக்கும் “நதியே அடங்காதே அணைக்குள் முடங்காதே...” என்ற பாடல் பெண்களுக்கு தன்னம்பிக்கை தரும் பாடலாக அமைந்துள்ளது. இப்பாடல் நிச்சயம் மகளிர் மத்தியில் மிகப் பிரபலமாக பேசப்படும்.

 

”அண்ணன மிஞ்ச இங்க யாரும் இல்லை...”எனும் துள்ளல் இசை  பாடலை இயக்குநர் வெங்கட் பிரபு,பிரேம்ஜி அமரன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இப்பாடலை கேட்போரை கிறுகிறுக்க வைக்கும். காண்போரை ஆட வைக்கும்.

 

இப்படத்தில் 6 சண்டை காட்சிகள் அற்புதமாக அமைந்துள்ளது. குறிப்பாக ராணிப்பேட்டை தோல் தொழிற்சாலையில் மிகப் பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டு 5 நாட்கள் படப்பிடிப்பு நடத்திருக்கிறார்கள்.

சண்டை காட்சிகளை மிரட்டி இருக்கிறார் மிரட்டல் செல்வா. தூள் கிளப்பி இருக்கிறார் வரலட்சுமி சரத்குமார்.

 

இதன் படப்பிடிப்பு மொத்தம் 55 நாட்களில் சென்னை மற்றும் வேலூர் விஐடி கல்லூரியில்  இரவு பகல் பாராது நடைபெற்றிருக்கிறது.

Related News

8742

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

Recent Gallery