முடிவடைந்த ‘விடுதலை’ படப்பிடிப்பு! - மகிழ்ச்சியில் படக்குழு
Saturday December-31 2022

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் ‘விடுதலை’ திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாராகி வருவதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், இப்படம் தொடங்கி நீண்ட நாட்கள் ஆனதால் படம் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகிகொண்டிருந்தது.

 

ஆனால், படத்தை பற்றி வெளியாகும் தகவல்களில் உண்மை இல்லை, படப்பிடிப்பு எந்தவித பிரச்சனையும் நடைபெற்று வருவதாக, ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மெண்ட் சார்பில் படத்தை தயாரித்து வரும் எல்ரெட் குமார் விளக்கம் அளித்தார்.

 

இந்த நிலையில், ‘விடுதலை’ படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகத்திற்கான முழு படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்து விட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

தற்போது முதல் பாகத்திற்கான பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், படம் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் எல்ரெட் குமார் ஏற்கனவே அறிவித்தபடி 'விடுதலை' படத்தின் இரண்டு பாகங்களும் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக இருக்கிறது. 

 

'விடுதலை' படத்தின் இரண்டு பாகங்களையும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வழங்குகிறது. படத்தின் பாடல்கள், ட்ரைய்லர் மற்றும் படத்தின் வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

 

'விடுதலை' திரைப்படம் அதன் பிரம்மாண்டத்திற்காகவும் ரசிகர்களிடையே பேசப்படுகிறது. கண்களைக் கவரும்படியான மிகப்பிரம்மாண்டமான மற்றும் உண்மையான படப்பிடிப்பு தளங்கள் 'விடுதலை' படக்குழுவின் உழைப்பைக் காட்டுகிறது. 

 

விஜய்சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இசையமைப்பில் வேல்ராஜ் ஒளிப்பதிவில் பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் சண்டைக் காட்சிகளை அமைத்து இருக்கிறார்.

Related News

8748

தமிழ் சினிமாவில் நல்ல மாற்றங்கள் வரும் - ஜி.கே.எம்.தமிழ்குமரன் உறுதி
Monday March-16 2026

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க,   திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

Recent Gallery