Latest News :

முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகும் ‘காகங்கள்’
Tuesday January-03 2023

இலக்கிய செழுமையும், பண்பாட்டு சீர்மையும் நிறைந்த தமிழ் நிலத்தில், திரைப்பட கலையில் புதிய அழகியல்களையும், முன்னெடுப்புகளையும் உருவாக்கும் நோக்கில் ’மாயவரம் பிக்சர்ஸ்’ என்ற புதிய நிறுவனம் தமிழ் சினிமாவில் அடுயெடுத்து வைத்துள்ளது. இந்த புதிய நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்திற்கு ‘காகங்கள்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

 

இதில், கிஷோர், விதார்த், குரு சோமசுந்தரம், லிஜோமோல் ஜோஸ், யோகி பாபு, இளவரசு உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

 

ஆனந்த் அண்ணாமலை எழுதி இயக்கி  தயாரிக்கும் இப்படத்திற்கு இளவரசு ஒளிப்பதிவு செய்கிறார். எம்.எஸ்.கிருஷ்ணா இசையமைக்க, ராமு தங்கராஜ் கலையை நிர்மாணிக்கிறார். அந்தோணி பிஜே ரூபன் ஒலி வடிவமைப்பை கவனிக்க, டீனா ரொசாரியோ ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.

 

வெவ்வேறு நம்பிக்கை கொண்ட மனிதர்கள் எவ்வாறு காகங்களால் ஒரு புள்ளியில் இணைகின்றனர், ஒரு வாழ்வு எப்படி  இன்னொரு வாழ்வோடு பின்னிப் பிணைந்திருக்கிறது, இயற்கை தன் ‘மர்மமான முறையில்’ எப்படி பொதுவாழ்வை உந்திச் செல்கிறது, போன்றவற்றை வெளிப்படுத்தும் விதமாக இப்படத்தின் கதை, திரைக்கதை மற்றும் ஒளி ஒலி வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 

Kaagangal Movie News

 

இப்படத்தின் துவக்க விழா பூஜையுடன் நடைபெற்றுள்ள நிலையில், பொங்கல் பண்டிகைக்கு பின்னர் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

Related News

8755

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

Recent Gallery