’வதந்தி’ இயக்குநருடன் கைகோர்த்த ‘சர்தார்’ தயாரிப்பாளர்!
Friday January-06 2023

சூர்யா நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற ‘சிங்கம் 2’ மற்றும் கார்த்தி நடிப்பில் வெற்றி பெற்ற ‘தேவ்’, ‘சர்தார்’ ஆகிய படங்களை தொடர்ந்து சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘காரி’ என தொடர்ந்து வெற்றி படங்களை தயாரித்து வரும் பிரின்ஸ் பிக்சர்ஸ் லக்‌ஷ்மண் குமார், தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக இருப்பதோடு, தரமான படங்களையும், கமர்ஷியலாக வெற்றி பெறும் படங்களையும் தயாரித்து வருகிறார்.

 

‘காரி’ படத்தை தொடர்ந்து பல படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ள தயாரிப்பாளர் லக்‌ஷ்மண் குமார், சமீபத்தில் அமேசான் ஒடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘வதந்தி’ தொடரின் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்க உள்ளார். விஜய் ஆண்டனி மற்றும் அர்ஜுன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘கொலைகாரன்’ படத்தை இயக்கியிருக்கும் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கும் இரண்டாவது திரைப்படம் இதுவாகும்.

 

இப்படம் குறித்த அறிவிப்பை தயாரிப்பாளர் லக்‌ஷ்மண் குமார் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததோடு, பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் ஆண்ட்ரூ லூயிஸ் இணைந்திருக்கும் தகவலை புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்.

 

இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட முழு விவரங்களை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிட இருக்கும் நிலையில், தயாரிப்பாளர் லக்‌ஷ்மண் குமார் மற்றும் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இணைந்திருப்பது கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related News

8759

தமிழ் சினிமாவில் நல்ல மாற்றங்கள் வரும் - ஜி.கே.எம்.தமிழ்குமரன் உறுதி
Monday March-16 2026

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க,   திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

Recent Gallery