Latest News :

விஜய் மற்றும் அஜித் படங்களுக்கு இடையே ‘ஆணவக்கொலை’ பற்றி பேசும் டிரைலர்!
Friday January-06 2023

அஜித்தின் ‘துணிவு’ மற்றும் விஜயின் ‘வாரிசு’ பொங்கல் வெளியீடாக ஜனவரி 11 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாவதால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

மேலும், தமிழக ஊடகங்கள் அனைத்தும் வாரிசு மற்றும் துணிவு படங்கள் பற்றி பேசுவதோடு, இரண்டு படங்களின் டிரைலர், போஸ்டர், ரசிகர்கள் ஆகியவற்றை பற்றி அதிகமாக பேச தொடங்கியுள்ளது.

 

இந்த நிலையில், விஜய் மற்றும் அஜித் படங்களுக்கு இடையே ஆணவக்கொலை பற்றி பேசும் டிரைலர் வெளியாக உள்ள தகவல் வெளியாகி கோலிவுட்டின் பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது.

 

ஆம், விஜயின் ‘வாரிசு’ மற்றும் அஜித்தின் ‘துணிவு’ படம் வெளியாகும் திரையரங்குகளில் ஆணவக்கொலை பற்றிய நெஞ்சை பதறவைக்கும் காட்சிகளுடன் உருவாகியுள்ள ‘வர்ணாஸ்ரமம்’ படத்தின் டிரைலர் வெளியாக உள்ளது.

 

சுகுமார் அழகர்சாமி எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தை தயாரித்திருக்கும் சிந்தியா லெளர்டே இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவருடன் ராமகிருஷ்ணன், பிக் பாஸ் புகழ் அமீர், வைஷ்ணவி ராஜ், ஸ்ரீராம் கார்த்திக், விஷ்ணு பாலா, குகாசினி, நிமிமானுவேல், வாசுதேவன், வந்தனா, உமா மகேஷ்வரி, ஏ.பில்ரத்னவேல், விசை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

 

Varnasramam

 

தீபன் சக்கரவர்த்தி இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்களை உமாதேவி எழுதியிருக்கிறார். பிரவீணா.எஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கா.சரத்குமார் படத்தொகுப்பு செய்ய, ரஜேஷ் கண்ணன் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார். புத்தமித்திரன் கலை இயக்குநராக பணியாற்ற, ஏ.பி.ரத்னவேல் நிர்வாக தயாரிப்பை கவனித்துள்ளார். எம்.பாலமுருகன் தயாரிப்பு மேற்பார்வையாளராக பணியாற்றியுள்ளார்.

 

தமிழ் படங்களில் பாடுவதற்காக சென்னை வந்த அமெரிக்க பாடகியான சிந்தியா லௌர்டே அதற்கான வாய்ப்பை உருவாக்குவதற்காக படத்தயாரிப்பில் ஈடுபட்டார். அதற்காக சிந்தியா புடொடக்‌ஷன் ஹவுஸ் என்ற பட நிறுவனத்தை துவக்கினார். சுகுமார் அழகர்சாமியின் கதையை தேர்வு செய்து அவரையே படத்தை இயக்கச் சொன்னார். கதையின் நாயகியாக நடித்து, தனக்கு பிடித்தமான பாடலையும் பாடி , படத்தையும் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related News

8761

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

Recent Gallery