கடந்த ஆண்டின் தமிழ் சினிமாவில் எதிர்பாராத மிகப்பெரிய வெற்றி படமாக ‘லவ் டுடே’ அமைந்தது. இப்படத்தில் நாயகியாக நடித்த இவானாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்ட நிலையில், ஜி.வி.பிரகாஷ் மீண்டும் இவானாவுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.
ஆக்செஸ் பிலிம் பேக்டரி சார்பில் ஜி.டில்லி பாபு தயாரிப்பில் உருவாகும் புதிய படத்திற்கு ‘கள்வன்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் இவானா நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் இயக்குநர் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடிக்க, தீனா, ஜி. ஞானசம்பந்தம், வினோத் முன்னா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
ரமேஷ் அய்யப்பனுடன் இணைந்து இப்படத்தின் கதை, திரைக்கதை எழுதியுள்ள பி.வி.சங்கர் ஒளிப்பதிவு செய்து படத்தை இயக்கியுள்ளார். இவர்களுடன் இணைந்து ராஜேஷ் கண்ணா படத்தின் வசனத்தை எழுதியுள்ளார்.

பாலா இயக்கத்தில் வெளியான 'நாச்சியார்' படத்தில் ஒன்றாக இணைந்து நடித்ததற்கு பிறகு ஜிவி பிரகாஷ் மற்றும் இவானா இந்தப் படத்தில் நடிக்கின்றனர். காமெடி அட்வென்சர் ட்ராமாவாக உருவாகி வரும் இந்தப் படத்தில் பல த்ரில்லர் தருணங்கள் உள்ளன.
படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் படத்தின் ட்ரைய்லர், ஆடியோ மற்றும் உலகம் முழுவதும் படம் திரையரங்குகளில் வெளியாகும் தேதி ஆகியவை குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...
ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் G...