Latest News :

சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது
Saturday January-07 2023

ட்ரீம் ஹவுஸ் நிறுவனம் சார்பில் புதுமையான திகில் படத்தை தயாரிக்கும் என்.ஹாரூன், அப்படத்தின் கதை எழுதி இயக்கவும் செய்கிறார். சோனியா அகர்வால் மற்றும் ஸ்ம்ருதி வெங்கட் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் துவக்க விழா பூஜையுடன் எளிமையான முறையில் நடைபெற்றது.

 

நிஜத்தில் நம் கண் முன் நடக்கும் பல அமானுஷ்யமான சம்பவங்களுக்கு, உண்மையில் ஏன் எப்படி நடக்கிறது என்பதற்கான பதில்கள் நம்மிடம் இல்லை. அப்படி நடந்த சில சம்பவங்களின் பாதிப்பில் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமான ஹாரர் காமெடியாக இல்லாமல், நம்மை மிரள வைக்கும் மிரட்டலான ஹாரர் திரைப்படமாக இப்படம் உருவாக உள்ளது.

 

நடிகைகள் ஸ்ம்ருதி வெங்கட், சோனியா அகர்வால் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில் நாயகன் பாத்திரத்தில் ரோஷன் நடிக்கிறார். இசையமைப்பாளர் சித்தார்த் விபின், இயக்குநர் சுப்பிரமணியம் சிவா இருவரும் மாறுபட்ட முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

 

Soniya Agarwal and Shrumathi Venkat

 

இப்படத்தின் படப்பிடிப்பு  சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறவுள்ளது. திகில் படக்காதலர்களுக்கு ஒரு அருமையான விருந்தாக இப்படம் இருக்கும். படத்தின் பெயர் மற்றும் மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

 

கே.எம்.ரயான் இசையமைக்கும் இப்படத்திற்கு விஜயகுமார் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். புஜு.வ, டான் போஸ்கோ ஆகியோர் படத்தொகுப்பு செய்ய, ஃபயர் கார்த்திக் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். டான் பாலா கலையை நிர்மாணிக்க, ரிச்சர்ட் நடன காட்சிகளை வடிவமைக்கிறார். விவேகா மற்றும் குட்டி ரேவதி பாடல்கள் எழுதுகிறார்கள்.

Related News

8764

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

Recent Gallery