மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ள விஜயின் ‘மெர்சல்’ படத்திற்கு எதிராக பல பிரச்சினைகள் உருவெடுத்துள்ளது. இதற்கிடையே, தீபாவளி முதல் திரையரங்க உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதால், மெர்சல் வெளியீட்டுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் கவலையடைந்த நிலையில், விஜயும் ரொம்ப அப்செட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், திருச்சி விநியோகஸ்தர் ஸ்ரீதர், விஜய் ரசிகர்களின் கவலையை போக்கும் விதத்தில் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
அதாவது, ‘மெர்சல்’ படத்தின் தலைப்பு, ரிலீஸ் உள்ளிட்ட எதில் பிரச்சினை ஏற்பட்டாலும், விஜய் என்ற மெரசல் அரசனால் அத்தனை பிரச்சினைகளும் தவிடுபொடியாகிவிடும் என்றும், அறிவித்தது போல் மெர்சல் தீபாவளிக்கு நிச்சயம் வெளியாவதுடன், வசூலில் மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்தும், என்றும் அவர் கூறியுள்ளார்.
ஸ்ரீதரின் இந்த தகவல், விஜய் ரசிகர்களை இப்போதே தீபாவளி கொண்டாட வைத்துவிடும் என்பது உறுதி.
லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...