Latest News :

உண்மை கதையை மையமாக வைத்து உருவான ‘தில் திலீப்’ படத்தின் டிரைலர் வெளியானது!
Tuesday January-10 2023

‘குபீர்’ படம் மூலம் கோடம்பாக்கத்தில் இயக்குநராகவும், நடிகராகவும் அறிமுகமானவர் திலீப் குமார். யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாமல், தன்னிடம் இருந்த சினிமா ஆர்வத்தின் மூலமாக திரையுலகில் நுழைந்தவர், தற்போது தனது இரண்டாவது படத்தை இயக்கி நடித்துள்ளார்.

 

’தில் திலீப்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் திலீப் குமார், ராதா ரவி, டினா, வைஷ்ணவி, தமிழ்ச்செல்வன், பிரதாப், ஃபரோஸ், ஒயிட், கர்வாஸ், டாக்டர் பிரபு, மதன், இமரான், ஏகவள்ளி, ராதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

 

பிரவீண் ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹர்ஷன் ராதாகிருஷ்ணன் மற்றும் ஏழிசை வேந்தன் ஆகிய இருவர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். அகிலன் கங்காதரன் பாடல்கள் எழுத, பின்னணி அந்தோணி தாசன், பென்னி தயாள், கிறிஸ்டோபர் ஸ்டான்லி, எம் சி பாஸீ ஆகியோர் பாடல்களை பாடி இருக்கிறார்கள். 

 

உண்மை சம்பவத்தை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஆர்ச்சர் சினிமாஸ் மற்றும் சாகித்யா ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்களில் சார்பில் சின்னையன் மற்றும் வெங்கடேஷ் பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

 

அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராகியிருக்கும் நிலையில் இப்படத்தின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளார்.

 

படம் பற்றி இயக்குநர் திலீப் குமார் பேசுகையில், “திரைப்படப் படைப்பாளியாக உருவாக்க வேண்டும் என்ற தனது கனவை தொடர்ந்து துரத்தும் ஒரு எளிய மனிதனின் உண்மை கதை தான் 'தில் திலீப்'. நகைச்சுவையாகவும், உத்வேகம் அளிக்கும் வகையிலும் யதார்த்த வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு இதன் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.” என்றார்.

Related News

8770

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

Recent Gallery