Latest News :

சென்னையில் மாஸ் காட்டும் ஷாருக்கான் ரசிகர்கள்! - பிரமாண்ட கட் அவுட்டுக்கு பாலபிஷேகம்
Monday January-23 2023

ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் நடிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் யாஷ் ராஜ் பிலிம்ஸ் ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வருகின்ற ஜனவரி 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் பிரம்மாண்ட மற்றும்  மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் ’பதான்’.

 

இப்படத்தின் ட்ரைலர் மற்றும் அதனை தொடர்ந்து வெளியான பேஷரம் ரங் ,   'ஜூம் ஜோ பதான்' ஆகிய இரண்டு பாடல்கள் சூப்பர் ஹிட்டாக மாறி இணையத்தில் கலக்கத்தையும், பிரமிப்பையும்  ஏற்படுத்தியது.

 

4 ஆண்டுகளுக்குப் பிறகு  'கிங் கான்' 'பாலிவுட்டின் ராஜா'ஷாரூக் கான்  திரைப்படம் திரையரங்குகளுக்குத் திரும்பியதைக் கொண்டாடும் வகையில் தமிழ்நாட்டின் உட்லேண்ட்ஸ் தியேட்டருக்கு வெளியே ஷாரூக் கான் ரசிகர்கள் மாபெரும் கட்அவுட் ஒன்றை வைத்து கொண்டாடுகின்றனர்.

 

Pathan

 

ஏற்கனவே இப்படம்  டிக்கெட் முன்பதிவில் பிரம்மாஸ்திரத்தை முந்திவிட்டது. ரிலீஸுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், விடுமுறை அல்லாத ஒரு நாள் வசூல் சாதனையில் புதிய  பாக்ஸ் ஆபீஸ் சாதனையை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

8784

உடல் நலக்குறைவால் காலமான ரசிகர்! - வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி
Wednesday April-24 2024

நடிகர் ஜெயம் ரவியின் ரசிகர்கள், ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள்...

அமீர் நடிப்பில் உருவாகியுள்ள ‘உயிர் தமிழுக்கு’ மே 10 ஆம் தேதி வெளியாகிறது!
Wednesday April-24 2024

யூடியுப் திரைப்பட விமர்சகர் புளூ சட்டை மாறன் இயக்கத்தில் வெளியான ’ஆன்டி இண்டியன்’ படத்தை தயாரித்த ஆதம் பாவா, தனது மூன் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘உயிர் தமிழுக்கு’...

ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ’ஜெய் ஹனுமான்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!
Wednesday April-24 2024

கடந்த ஜனவரி மாதம் வெளியான ‘ஹனுமான்’ திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து அப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் வர்மா, இந்திய அளவில் கவனம் ஈர்த்திருப்பதோடு, அவரது அடுத்த படைப்பான ‘ஹனுமான்’ படத்தின் தொடர்சியான ‘ஜெய் ஹனுமான்’ படத்தின் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது...