Latest News :

கிரிக்கெட் வீரர் தோனி தயாரிக்கும் முதல் தமிழ்ப் படம்! - பூஜையுடன் தொடங்கியது
Sunday January-29 2023

அறிமுக இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் தயாராகும் ‘எல்.ஜி.எம்’ (லெட்ஸ் கெட் மேரீட்) திரைப்படத்தில் நடிகை நதியா, நட்சத்திர நடிகர் ஹரிஷ் கல்யாண், நாயகி இவானா, நடிகர் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். விஸ்வஜித் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ரமேஷ் தமிழ்மணி இசையமைக்கிறார். திருமதி சாக்ஷி சிங் தோனியின் கருத்தாக்கத்தை மையமாக கொண்டு, குடும்ப பொழுதுபோக்கு அம்சத்துடன் தயாராகும் இந்த திரைப்படத்தை தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.

 

இதன் போது திருமதி சாக்ஷி சிங் தோனி பேசுகையில்,“ நாங்கள் எங்களுடைய குழுவுடன் இங்கேயிருப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். மேலும் இது போன்ற அர்த்தமுள்ள கதைகள் வழங்குவதற்கும் ஆவலுடன் தயாராகயிருக்கிறோம்.” என்றார். 

 

தோனி என்டர்டெய்ன்மெண்ட்ஸின் வணிகப்பிரிவின் தலைவர் விகாஸ் ஹசிஜா பேசுகையில்,“ நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் உள்ள ரசிகர்களிடம் அர்த்தமுள்ள கதைகள் எடுத்துச் செல்வதே தோனி என்டர்டெய்ன்மெண்ட்ஸின் நோக்கம். அந்த எண்ணத்துடன் தான் இந்த படம் தொடங்கப்பட்டுள்ளது. தோனி என்டர்டெய்ன்மெண்ட்ஸ் நல்லக் கதைகளையும், திரைக்கதைகளையும் தேடிக்கொண்டிருக்கிறது. மேலும் பல திரைப்படங்களை தமிழில் தயாரிக்கவிருக்கிறோம்  இந்த படத்தின் பணிகள் தொடங்குவதன் மூலம் நீண்ட மற்றும் பயனுள்ள ஆட்டத்தைத் தொடங்கியிருக்கிறோம். தமிழ் திரையுலகில் நல்லதொரு மாற்றத்தை உருவாக்கவும் விரும்புகிறோம்.” என்றார். 

 

LGM

 

தோனி என்டர்டெய்ன்மெண்ட்ஸின் படைப்புத் திறன் பிரிவின் தலைவர் பிரியன்ஷு சோப்ரா பேசுகையில்,“ எல் ஜி எம் படத்தின் பணிகள் தொடங்கப்படும் தருணத்தில், படக்குழுவினருடன் உடனிருப்பதில் மகிழ்ச்சியாகவும், பரவசமாகவும் இருக்கிறேன். திருமதி சாக்ஷி சிங் தோனியின் கருத்தாக்கத்தை, இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி நல்லதொரு பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட திரைக்கதையாக மாற்றிய மாயஜால வித்தையை நேரடியாக கண்டதால், படத்தைக் காண பேரவலுடன் காத்திருக்கிறேன்.” என்றார்.

Related News

8792

அஜித்தின் ‘அமராவதி’ திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது!
Tuesday March-28 2023

அஜித் நாயகனாக அறிமுகமான திரைப்படம் ‘அமராவதி’...

வியக்க வைத்த ‘விடுதலை’ பட ஆக்‌ஷன் காட்சிகள்! - வைரலாகும் மேக்கிங் வீடியோ
Tuesday March-28 2023

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதையின் நாயகனாகவும், விஜய் சேதுபதி வாத்தியாராகவும் நடித்திருக்கும் ‘விடுதலை - பாகம் 1’ திரைப்படத்தை ஆர்...

நடிகை யாஷிகா ஆனந்த் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்!
Monday March-27 2023

2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் தேதியன்று இரவு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் தனது தோழிகளுடன் நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற கார் மகாபலிபுரம் அருகே விபத்துக்குள்ளானது...