இயக்குநர் பா.இரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் தன்னிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றியவர்களை வைத்து தொடர்ந்து படங்கள் தயாரித்து வருகிறார். அந்த வகையில், லெமன் லீப் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில், தன்னிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஜெய்குமார் இயக்கத்தில் பா.இரஞ்சித் ஒரு படம் தயாரித்து வருகிறார்.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தில் அசோக்செல்வன், சாந்தனு பாக்யராஜ், ப்ரித்வி பாண்டியராஜன், கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி ஆகியோர் நடிக்கிறார்கள்.
தமிழ் அழகன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.
இளைஞர்களின் முக்கிய விளையாட்டாகிப் போன கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு அரக்கோணம் மற்றும் அதைசுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது முழு படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.
கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள், அவர்களின் நட்பு, காதல், என ஜனரஞ்சகமான படமாக எல்லோரும் ரசிக்கும் விதமாக இருக்கும் என்கின்றனர் படக்குழுவினர்.
அஜித் நாயகனாக அறிமுகமான திரைப்படம் ‘அமராவதி’...
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதையின் நாயகனாகவும், விஜய் சேதுபதி வாத்தியாராகவும் நடித்திருக்கும் ‘விடுதலை - பாகம் 1’ திரைப்படத்தை ஆர்...
2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் தேதியன்று இரவு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் தனது தோழிகளுடன் நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற கார் மகாபலிபுரம் அருகே விபத்துக்குள்ளானது...